ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
219. ஸ்ரீ நிமிஷாய நம:
ஜாக்3ரதாவந்தனே ‘நிமிஷ’ நமோ நமோ நினகெ3
ஜாக்3ரதா அவஸ்தா2 ப்ரவர்த்தக ஸ்தூ2லபு4க்ஞ விஶ்வ நீ
ஜக3 ஸ்தூ2ல விஷயக3ளோள் ஸுக2ஸார நீனிருவி
ஜக3ல்லீலானந்த3 நீ ஸ்வாக்2யரஸ கொம்பி3 அனக4
எப்போதும் முழிப்புடன் இருப்பவனே. ‘நிமிஷனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். விழிப்பு நிலையை கொடுப்பவனே. உலகில் அனைத்து ஸ்தூல பதார்த்தங்களிலும், அதன் சுகங்களை (சுக பலன்களை) ஏற்றுக் கொள்பவனாக இருப்பவனே. உலகின் அனைத்து செயல்களையும் உன் லீலைகளால் செய்பவனே. அனைத்திலிருந்தும் ஸ்வாக்ய ரஸத்தினை ஏற்றுக் கொள்பவனே. யாராலும் வெல்லப்பட முடியாதவனே.
220. ஸ்ரீ அனிமிஷாய நம:
மனுஷ்யாதி3 ஜீவரிகெ3 பி4ன்னனு லீலாக்ரீடா3
அனுப4வ தே3வ ‘அனிமிஷனே’ நமோ நினகெ3
மனுஷ்யவத் அவதார மாடி3தரூ நரனல்ல
பி4ன்னனு ஞானானந்த3ப3ல அப்ராக்ருத விக்3ரஹ
மனிதர்கள் முதலான அனைத்து ஜீவர்களைவிட பின்னனே (வேறுபட்டவனே). லீலைகளால் செயல்களை செய்பவனே. அனுபவத்தை கொடுக்கும் தேவனே. ‘அனிமிஷனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். மனிதனாக நீ அவதாரம் செய்திருந்தாலும், நீ மனிதன் அல்ல. அனைவரையும் விட வேறுபட்டவன். ஞானானந்த பலரூபனே. அப்ராக்ருத தேகத்தைக் கொண்டவனே.
221. ஸ்ரீ ஸ்ரக்3விணே நம:
அதிக்ரமிஸி இருவந்த2 ‘ஸ்ரக்3வி’ நமோ நினகெ3
ஸ்ரீதே3விகு3 பி3ரம்மாஶிவாதி3 ஸுரநர ஸமஸ்த
ஜந்துக3ளு சராசர ஸர்வக்கு ஸஹா மீரித3
அதிபராக்ரம கு3ணப3லாதி3க3ளிந்த3 பூர்ண
அனைவரையும் மீறியவனான ‘ஸ்ரக்வி’ உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள். ஸ்ரீதேவிக்கும், பிரம்மதேவரே முதலான அனைத்து சுரர்களுக்கும், நரர்களுக்கும், அனைத்து ஜந்துக்களுக்கும், சராசரங்களான அனைத்திற்கும் எப்போதும் மீறியவனே. அனைவரையும்விட பராக்ரமியே. குண, பலங்களால் பூர்ணனே.
***
No comments:
Post a Comment