ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
249. ஸ்ரீ ஸாத4வே நம:
அஸுரரிந்த3 அபஹார மாட3ல்பட்ட கோ3க3ள
நீ ஸம்ரக்ஷிஸுவுத3காகி3 ஶைலா ஶீலா ஒட3தி3
ஹே ‘ஸாது4’ நமோ நினகெ3 தீ3னஜன க்ருபாகர
நீ ஸதா3 ப்ராணிரக்ஷக ஸ்வப்ரயோஜன ரஹித
அசுரர்களால் கடத்தப்பட்ட பசுக்களை காப்பதற்காக நீ மிகப்பெரிய மலைகளை உடைத்தாய் (தூக்கினாய்); ஹே ஸாதுவே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பக்தர்களை காப்பவனே. நீ எப்போதும் அனைத்து பிராணிகளையும் காப்பவன். எதனாலும் உனக்கு எவ்வித பிரயோஜனங்களும் இல்லை.
250. ஸ்ரீ ஜன்ஹவே நம:
ஸுரர ப4க்தர ஸுஸ்வபா4விக3ள ஸஹ நீனு
ஸரஸ ஸக்2யாதி3க3ள மாள்ப ‘ஜன்ஹு’ நமோ எம்பெ3
உரக3 பூ4ஷண தாண்ட3வ விப்ரோத்தம ஸுதா4ம
ஸுக்3ரீவ மாலாகாரோத்3த4வ கோ3கோ3ப கோ3பீஸக2
தேவர்களின், பக்தர்களின், ஸஜ்ஜனர்களின் நண்பன் நீயே. சுலபமாக அனைவருக்கும் நீ இருக்கிறாய். ஜன்ஹுவே உனக்கு என் நமஸ்காரங்கள். பாம்பினை தரித்தவனே. நர்த்தனம் ஆடுபவனே. ஸர்வக்ஞனே. வைகுண்டனே. சுக்ரீவனுக்கு மாலையை அணிவித்து, அவனை காத்தவனே. பசுக்களை மேய்த்தவனே. கோபியர்களின் தோழனே.
251. ஸ்ரீ நாராயணாய நம:
நரோபயோக3க்கெ ஜலாதி3க3ளீவ ‘நாராயண’
ஶிரபா3கி3 நமோ எம்பெ3 ஸ்ரீபூ4மஹாது3ர்கா3பதே1
அரதூ3ர க்ஷயஹீன நிர்தோ3ஷ ஞானாதி3பூர்ண
நரோத்பாத3க நரவந்த்3ய ஜலஶாயி லக்ஷ்மீஶ
ஜீவர்களின் பயன்பாட்டிற்காக தண்ணீர் ஆகியவற்றை கொடுக்கும் நாராயணனே. உனக்கு தலை வணங்கி நமஸ்காரங்களை செலுத்துகிறேன். ஸ்ரீ, பூ, துர்காவின் பதியானவனே. தோஷ தூரனே. குறைகள் அற்றவனே. ஞானாதி பூர்ண குணங்களைக் கொண்டவனே. அனைவரையும் மேம்படுத்துபவனே. அனைவரையும் வெல்பவனே. தண்ணீரில் படுத்திருப்பவனே. லட்சுமிதேவியின் தலைவனே.
****
No comments:
Post a Comment