Thursday, January 19, 2023

#80 - 212-223-224 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 222. ஸ்ரீ வாசஸ்பதயே நம:

வாகீ3ந்த்3ரியாதி3பதிவாசஸ்பதிநமோ நினகெ3

ஆக3மாம்னாய வேதோ3பனிஷத் வாக்யக3 ஸர்வக்கு

அக3ணித மஹாத்ம்யவாகி3 நீனு பதியாகி3ருவி

ஸக்ரமவேத3வாக்யக3 ரக்ஷிபி ப்ரளயதி3 

வாக் இந்திரியத்திற்கு அதிபதியே ‘வாசஸ்பதியே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆகம, ஆம்னாய வேதங்கள், உபநிஷத் வாக்கியங்கள் என அனைத்திற்கும் நீயே தலைவனாக இருக்கிறாய். அகணித மஹாத்ம்யத்தைக் கொண்டவன் நீ. பிரளய காலத்தில் அனைத்து வேத வாக்கியங்களையும் காப்பவனே. 

223. ஸ்ரீ உதா3ரதி4யே நம:

ஸர்வப3ந்த4 நாஶக கர்மவான்உதா3ரதீ4நமோ

ஸர்வோத்க்ருஷ்டதா3 லக்ஷ்மியதீ4ஞானஸுகா2தி3

ஸர்வப3லகு3ணாஸ்ரயனு உதா3 ஸ்ருஹுத3

ஸர்வதா3 நிர்தோ3 நிரவதி4 ஞானவான் நீனு 

அனைத்து பந்தங்களையும் அழிக்கும் கர்மங்களை செய்விப்பவனே ‘உதாரதியே உனக்கு என் நமஸ்காரங்கள். உ என்றால் அனைத்து நலன்களையும் கொடுப்பளான லட்சுமிதேவியின்; தீ - என்றால் அனைத்து ஞான ஸுக, பல குணங்களின் ஆஸ்ரயனே. கருணை வடிவானவனே. நல் இதயம் கொண்டவனே. எப்போதும் தோஷம் அற்றவனே. எல்லையற்றதான ஞானத்தைக் கொண்டவனே. 

224. ஸ்ரீ அக்3ரணே நம:

ஶுபா4ஶுப4 கர்ம நேதாஅக்3ரணேநமோ நினகெ3

ஶுப4 மோக் ஸாத4னெ ஸ்ரவண மனன ஸுத்4யான

ஶுப4 விரோதி4 ஸம்ஸார தமஸு ஸாத4 கர்ம

ஶுப4தம நீ ஈர்வித4 கர்மக்கு அக்3 நமோ 

ஶுப, அஶுப என அனைத்து கர்மங்களையும் செய்பவனே ‘அக்ரணே உனக்கு என் நமஸ்காரங்கள். ஶுபமான மோட்சத்திற்கு ஸாதனைகளான ஸ்ரவண, மனன, ஸுத்யான ஆகியவற்றை செய்விப்பவனே. அஶுபமான ஸம்ஸாரத்திற்கு, தமஸ்ஸிற்கு ஸாதனமான கர்மங்களை செய்விப்பவனே. ஶுபதமனே. நீயே இந்த இரு வித கர்மங்களுக்கும் முதல்வன் (தலைவன்).

***

No comments:

Post a Comment