Thursday, January 26, 2023

#86 - 243-244-245 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

243. ஸ்ரீ ப்ரஸன்னாத்மனே நம:

த்3யுப்4யாதி3 ஸர்வத்ர இருவ ஜீவர்க3ளு 4யதி3ம்

ப்ரவர்த்திஸுவந்தெ மாள்பிப்ரஸன்னாத்மாநமோ எம்பெ3

நிவ்ருத்தி கர்மசரிஸுவ 4க்தரிகெ3 ப்ரஸன்ன

ஸ்ரீத4 ஸ்ரீனிவாஸ நீ ஒலியெ ஸர்வேஷ்ட லாப4 

ஸ்வர்க்கம் முதலான அனைத்து உலகங்களிலும் இருக்கும் ஜீவர்கள், பயத்துடன் (பக்தியுடன்) இருக்குமாறு செய்கிறாய். பிரஸன்னாத்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். நிவ்ருத்தி கர்மங்களை செய்யக்கூடிய பக்தர்களுக்கு மகிழ்கிறாய். ஸ்ரீதரனே. ஸ்ரீனிவாஸனே. நீ மகிழ்ந்தால் அதுவே அனைத்து விதமான லாபம் ஆகும். 

244. ஸ்ரீ விஶ்வத்3ருஷே நம:

ஸர்வரூபாதி3 அஸுர  நாஶகனு நீவிஶ்வத்3ருக்

ஸர்வதா3 நமோ நினகெ3 விஶ்வோத்பாத3கனு நீனு

விஶ்வதா4ரகனு நீனு விஶ்வாலயகர்த்தனு நீனு

விஶ்வ நிலயன ஞானாவ்ருதிப3ந்த4 மோக்ஷகர்த 

அனைத்து ரூபங்களாலும், அசுரர்களை அழிப்பவன் நீ. விஶ்வத்ருக் உனக்கு என் நமஸ்காரங்கள். உலகத்தை படைப்பவன் நீயே. உலகிற்கு ஆதாரகன் நீயே. உலகத்தில் இருப்பவர்களின் ஞானத்தை வளர்த்து, அவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்பவனும் நீயே. 

245. ஸ்ரீ விஶ்வபு4ஜே நம:

ஶம்ப3ராதி3 3ஹு அஸுரபுர நா மாடு3

ஸுப3லவான்விஶ்வபு4க்நமோ நமோ எம்பெ3 நினகெ3

பு4ங்க்தே விஶ்வ பு43வ்யயஎந்து3 உக்தவாகி3ஹுது3

விஶ்வபோஷக ஞானானந்தா3 3 ஓஜஸ்ஸுபூர்ண 

ஷம்பர போன்றதான பல அசுரர்களை அழிப்பவனே. மிகச் சிறந்த பலசாலியே. விஶ்வபுக். உனக்கு என் நமஸ்காரங்கள். ‘புங்க்தே விஶ்வபுகவ்யய என்று சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. உலகத்தை காப்பவனே. ஞான, ஆனந்த, பல, ஓஜஸ் ஆகிய குணங்களை முழுமையாகக் கொண்டவனே. 

***


No comments:

Post a Comment