Sunday, January 15, 2023

#76 - 210-211-212 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

210. ஸ்ரீ து3ர்மர்ஷணாய நம:

ஶத்ருக3ளிகெ3 உக்3து3ர்மர்ஷணநமோ நினகெ3

ஶத்ரு து3ஷ்டரிகெ3 4யங்கர கா4தக ந்ருஹரே

வராஹ ராம கிருஷ்ண கல்கி நீ யாரிந்த3லு

மர்ஷணகெ ஶக்யனு பூர்ணப3 ரூப நீனு 

எதிரிகளுக்கு உக்ரனே. துர்மர்ஷணனே உனக்கு என் நமஸ்காரங்கள். எதிரிகளுக்கு துஷ்டர்களுக்கு பயங்கரமான எதிரியே. ந்ருஹரியே. வராகனே. ராமனே. கிருஷ்ணனே. கல்கியே. நீ யாராலும் (முழுமையாக) அறியப்பட முடியாதவன். பூர்ணபலன்களின் ரூபம் நீயே. 

211. ஸ்ரீ ஶாஸ்தாய நம:

ஶத்ருக3 நாஶகனுஶாஸ்தாநமோ எம்பெ3

சோரர து3ஷ்டர அஸத்யவந்தர 3ண்டிஸுவி

சராசர ஜக3த்ஸர்வ நின்ன அதீ4னவாகி3ஹுது3

யாரு ஸமரில்லத3 பரமைக ஶாஸ்தா நினேவெ 

எதிரிகளை அழிப்பவனே. ஶாஸ்தாவே. உனக்கு என் நமஸ்காரங்கள். திருடர்களை, துஷ்டர்களை, பொய் பேசுபவர்களை தண்டிக்கிறாய். சராசரங்களால் நிறைந்த இந்த உலகம் முழுவதும் உன் அதீனமாகவே இருக்கிறது. யாரும் உனக்கு சமமானவர் இல்லை. ஸர்வோத்தமனான ஶாஸ்தா நீ ஒருவனே. 

212. ஸ்ரீ விஶ்ருதாத்மனே நம:

ப்ரஸித்34வாகி3 ஸ்தோத்ர மாடி3ஸிகொம்ப3விஸ்ருதாத்மா

நா ஶிரபா3கி3 நமோ நமோ எம்பெ3 கருணாப்3தி4யே

ஸ்ரீ ஸ்தோத்ர நுடி3 கொள்ளோ ஸுப்ரஸன்ன

ப்ரஸித்34 ஸ்வரூபவந்த விஶ்ருதாத்ம ஸ்ரீனிவாஸ 

அனைவராலும் ஸ்தோத்திரம் சொல்லப்பட்டு, அவற்றை ஏற்றுக் கொள்பவனே. விஶ்ருதாத்மனே. உனக்கு நான் தலைவணங்கி நமஸ்காரம் செய்கிறேன். கருணைக்கடலே. லட்சுமிதேவியின் தலைவனே. இந்த ஸ்தோத்திரத்தை ஏற்றுக் கொள்வாயாக. புகழ்பெற்ற ஸ்வரூபங்களைக் கொண்டவனே. விஶ்ருதாத்மனே. ஸ்ரீனிவாஸனே.

***


No comments:

Post a Comment