ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
195. ஸ்ரீ த3மனாய நம:
ஶத்ருக3ள புர நிரோத4னமாள்ப ‘த3மனனே’
ஶிரபா3கி3 நமோ எம்பெ3 முப்புரக3ளுரிஸிதி3
புரஸ்த2 ஸஞ்ஜீவினி ரஸவ கோ3ரூபதி3 குடி3து3
ஹரனொளித்3து3 ஒதகி3தி3 த்ரிபுர த3ஹிஸலிகெ
எதிரிகளின் இருப்பிடங்களைக் கூட அழிப்பவனே ‘தமனனே’ உனக்கு தலைவணங்கி நமஸ்காரம் செய்கிறேன். முப்புரங்களை அழித்தவனே. அப்போது ஸஞ்சீவினி ரஸத்தினை பசு ரூபத்தில் வந்து குடித்து உதவினாய். த்ரிபுராஸுரர்களை அழிப்பதற்காக, ருத்ரரில் இருந்து உதவி செய்தாய்.
196. ஸ்ரீ ஹம்ஸாய நம:
ஶத்ருவத4 கொடி3ஸுவவ ஹம்ஸனே நமோ எம்பெ3
நிர்தோ3ஷத்வதி3 ‘ஹம்’ ஸாரத்வதி3ம் ‘ஸ்வ:’ நிர்தோ3ஷஸுக2
ஆதி3ஸார ப3லவத்வதி3 ஞானிப4க்தபோஷண
நித்ய நிர்தோ3ஷஸார ப3லவந்ததி3ம் ஶத்ருவத4
எதிரிகளை அழிப்பவனே. ஹம்ஸனே உனக்கு என் நமஸ்காரங்கள். தோஷங்கள் அற்றவன் என்பதால் ‘ஹம்’ எனப்படுகிறாய். அனைத்தையும் நடத்துவதால் ‘ஸ்வ:’ எனப்படுகிறாய். தோஷங்கள் அற்ற சுகத்தினைக் கொடுத்து, அனைத்து பக்தர்களுக்கும் வலிமை ஆகியவற்றை அருளி, பக்தர்களை காப்பவனே. எதிரிகளை அழிப்பவனே.
197. ஸ்ரீ ஸுபர்ணாய நம:
விகாரவில்லதெ3 ஸமானவாகி3ருவ ‘ஸுபூர்ண’
உத்க்ருஷ்டானந்தா3னுப4வ ஸ்வரூப ஸுபர்ண நமோ
அகளங்க பரமானந்த3 ஸ்வரூப அவதார
ஸகலத3லு ஸர்வஸ்த2ரூபத3லு ஸமானபூர்ண
எவ்வித மாற்றங்களும் இன்றி சமமாகவே இருப்பவனே ‘ஸுபூர்ணனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். அபரிமிதமான ஆனந்த அனுபவ ஸ்வரூபத்தை கொண்டவனே. தோஷங்கள் அற்றதான பரமானந்த ஸ்வரூபனே. உன்னுடைய அவதாரங்கள் அனைத்திலும், அனைத்து ரூபங்களிலும், ஒரே மாதிரியாக பூரணமாக இருப்பவனே.
***
No comments:
Post a Comment