Wednesday, January 25, 2023

#85 - 240-241-242 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

240. ஸ்ரீ அனிலாய நம:

ஶத்ருக3 அவர ஸ்தா2னதி3ந்தோடி3ஸுவுத3ரல்லி

ப்ரபஞ்ஜன வாயு தே3வனந்தெ3 நீனுஅனிலனே

ஶிரபா3கி3 நமோ எம்பெ3 ஸ்வதந்த்ர 3ஶாலி நீ

தா4ரகனு ஸர்வக்கு நின்ன தா4ரகனு யாரு இல்ல 

எதிரிகளை அவர்களின் இடங்களிலிருந்து ஓட்டுவதில் வாயுதேவரைப் போல நீயும் ‘அனிலனே உனக்கு நான் தலைவணங்குகிறேன். ஸ்வதந்த்ரமான வலிமையானவன் நீயே. அனைத்தையும் தாங்குபவன். உன்னை தாங்குபவர்கள் யாரும் இல்லை. 

241. ஸ்ரீ 4ரணீத4ராய நம:

ஹரித3த்த பூ4மியுள்ள 4ரத்வாஜாதி33ளன்ன

ஹருஷபடிஸுவி அன்னாதி3 ஸாது4போ4ஜ்யவித்து

4ரணீத4நமோ நினகெ3 புருஷார்த்த2 தா3தா

மந்த3 கோ3வர்த்த4னதா4ரியே பூ4மிஜன பாலா 

ஸ்ரீஹரி அளித்த பூமிகளை கொண்ட பரத்வாஜாதி முனிவர்களுக்கு, அன்னாதி அனைத்து ஸாத்விக போஜனங்களை அளித்து மகிழ்ச்சிப்படுத்துகிறாய். தரணிதரனே உனக்கு என் நமஸ்காரங்கள். புருஷார்த்தங்களை கொடுப்பவனே. மந்தர மற்றும் கோவர்த்தன மலைகளை தூக்கியவனே. பூமியில் உள்ள அனைத்து மக்களையும் காப்பவனே. 

242. ஸ்ரீ ஸுப்ரஸாதா3 நம:

ஸஜ்ஜனர ஹஸ்ததா4ரகஸுப்ரஸாத3னேநமோ

ஸஜ்ஜனரு ஞானிக3ளிகெ3 மோக் ஹேது ப்ரஸாத3

த்ரிஜதீ3ஶனே நீனு நித்ய ஸுக2 ஒத3கு3வி

அஜ ஶிவாதி33ளிகெ3 த்வத் ப்ரஸாத3தி3ந்த3லேவெஸ்தா2 

ஸஜ்ஜனர்களின் கைகளைப் பிடித்து காப்பவனே. ஸுப்ரஸாதனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸஜ்ஜனர்கள் மற்றும் ஞானிகளுக்கு மோட்சத்தைக் கொடுப்பவனே; மூன்று உலகங்களின் தலைவனே. நித்ய ஸுகமான மோட்சத்தை நீ கொடுக்கிறாய். பிரம்ம, ருத்ரர்களுக்கு அவரவர்களின் இடமானது உன்னுடைய பிரஸாதத்தினாலேயே கிடைத்திருக்கிறது.

***


No comments:

Post a Comment