Friday, January 27, 2023

#87 - 246-247-248 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

246. ஸ்ரீ விபு4வே நம:

உத்க்ருஷ்ட ஶாஶ்வத 3லாதி3 4ர்மவான்விபு4நமோ

நித்யஞானானந்த3 3 ஸ்வரூபவுள்ள ப்ரத்3யும்ன

வாஸுதே3 கோல நாராயணானிருத்34 ந்ருஸிம்ஹ

அதிப3 ஸங்கர்ஷண ஶேஷஶாயி ஸாமஸ்துத்ய 

மிகச் சிறந்ததான நிரந்தரமான பலம் முதலான அனைத்து குணங்களையும் கொண்டவனே. தர்மவானே. விபுவே உனக்கு என் நமஸ்காரங்கள். நித்ய ஞானானந்த பல ஸ்வரூபம் உள்ள ப்ரத்யும்னனே, வாஸுதேவனே. நாராயணனே. அனிருத்தனே. நரசிம்மனே. மிகவும் பலசாலியே. ஸங்கர்ஷணனே. ஶேஶாயியே. ஸாம வேதத்தால் போற்றப்படுபவனே. 

247. ஸ்ரீ ஸத்கர்த்ரே நம:

4க்தர ஸத்கர்ம ப்ரஸித்34 மாடு3வவனு

ஸத்கர்தாநமோ நமோ ஸத்யஜக3த்கர்தா ரமே

தை3த்ய து3ர்ஜன ஹிம்ஸகனு ஸஜ்ஜனபோஷகனு

ஸதா3ஶோகரஹித ஶுக்ர நீனு ஸ்ரீ ப்ரக்2யாத 

பக்தர்களின் ஸத் கர்மங்களை பலிக்க வைப்பவனே. ஸத்கர்தனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸத்யமான இந்த ஜகத்தினை படைத்தவனே. ரமாதேவியின் தலைவனே. தைத்யர்களை, கெட்டவர்களை அழிப்பவனே. ஸஜ்ஜனர்களை காப்பவனே. எப்போதும் துக்கங்கள் இல்லாதவனே. பவித்ரமானவனே. நீ லட்சுமிதேவியின் தலைவன். அனைத்து உலகங்களிலும் புகழ் பெற்றவன். 

248. ஸ்ரீ ஸத்க்ருதயே நம:

4க்தியிந்து3த்தம ஸ்தோத்ர மாள்பர ப்ரியனு நீனு

4க்தியிந்து3த்தம ஸ்தோத்ர மாள்பரல்லி இருவி

ஸத்க்ருதிநமோ நினகெ3 4க்தக்ருத பூஜெகொம்பி3

க்ருதிரமண 4க்தேஷ்ட ப்ரத்3யும்ன ஸம்ஸ்துத்ய ப்ரீத 

பக்தியுடன் மிகவும் உத்தமமான ஸ்தோத்திரத்தை செய்பவர்களின் ப்ரியன் நீயே. அப்படி ஸ்தோத்திரம் செய்பவர்களில் நீ இருக்கிறாய். ஸத்க்ருதியே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் செய்யும் பூஜையை ஏற்றுக் கொள்கிறாய். க்ருதி ரமணனே. பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ப்ரத்யும்னனே. ஸ்தோத்திரங்களால் மகிழ்ச்சி அடைபவனே.

***


No comments:

Post a Comment