Wednesday, January 4, 2023

#72 - 198-199-200 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

198. ஸ்ரீ பு4ஜகோ3த்தமாய நம:

விஷயபோ43க்காகி3யே அன்னாதி3 போ43ரதரு

ஸ்ரீஶனலி பரான்முக2 தை3த்யரன்ன பீடி3ஸுவ

ஶாஸகபு4ஜகோ3த்தமநமோ எம்பெ3 ஶேஷஶய்யா

ஶவாஹன ஸேவகப்ரிய அஸுர ஶிக்ஷகனு 

அன்னம் முத்லான விஷய போகங்களில் ஈடுபடும், ஸ்ரீனிடம் பக்தி செய்யாத தைத்யர்களை பீடிக்கும், அவர்களை ஆளும் ‘புஜகோத்தமனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஶேஷன் மேல் படுத்திருப்பவனே. வலிமையான கருடனை வாகனமாக கொண்டவனே. பக்தர்களின் ப்ரியனே. அசுரர்களை தண்டிப்பவனே. 

199. ஸ்ரீ ஹிரண்யக3ர்பா4 நம:

வஜ்ரஹஸ்தனேஹிரண்யனாப4னேநமோ நினகெ3

வஜ்ரரேகா2ங்கித ஹஸ்ததி3 வஜ்ரகூரு நக2தி3ம்

நிர்ஜரர பூ4ஸுரர ஹரிப4க்த ப்ரஹ்லாத3

மூர்ஜக33 வைரி ஹிரண்யகன நாபி4 ஸீளிதி3 

தங்கமயமான ஹஸ்தங்களைக் கொண்டவனே ‘ஹிரண்யனாபனே உனக்கு என் நமஸ்காரங்கள். தங்கமயமான ரேகைகளைக் கொண்ட கைகளால், அதில் உள்ள வலிமை பொருந்திய நகங்களால், சிறந்த தேவதையான, ஹரிபக்தனான பிரகலாதனின் எதிரியான ஹிரண்யகனின் நாபியை கிழித்து அவனை கொன்றவனே. 

200. ஸ்ரீ ஸுதபஸெ நம:

அஸுரமாயா பூர்ண நாஶமாள்பஸுதபோநமோ

நீ ஸுபூர்ண ஞானஸ்வரூப மித்யாஞான ஹந்த

ஸுஸம்பூர்ணதாரகபரமேஶ்வர பாத1

பி3ஸஜப4 நின்னஸுத ஸுதபாத ஸுதபா 

அசுர சக்திகளை முழுமையாக அளிப்பவனே ‘ஸுதபனே உனக்கு என் நமஸ்காரங்கள். நற்குணங்களை முழுமையாகக் கொண்டவன். ஞான ஸ்வரூபன். மித்யா ஞானத்தை அழிப்பவனே. அனைத்தையும் தரித்திருப்பவனான ஸர்வோத்தமனே. பிரம்மன் உன் மகன். ஸச்சிதானந்த ஸ்வரூபியே. அனைவரையும் காப்பவனே. 

கு3ருக3 மத்4வக3 ஸரஸிஜாஸனபித ஸ்ரீ

விரஜ கல்யாணதம ஸுகு3ணாப்3தி4 ஸர்வகர்த்த

ஸ்ரீப்ரஸன்ன ஸ்ரீனிவாஸஸஹஸ்ர நாமனே நமோ

நீ ரசிஸி நுடிஸித்3து3 அர்ப்பிதவு ப்ரீதனாகோ3 || 

|| மூன்றாம் ஸந்தி முடிந்தது ||

|| ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து || 


***

No comments:

Post a Comment