ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
237. ஸ்ரீ ஸம்ப்ரமர்த்த3னாய நம:
ப4க்திகெ3 விரோத4 கு3ணக3ளு ஹரித்3வேஷி ஹரி
ப4க்தர த்3வேஷி தை3த்யர நாஶமாள்ப ‘ஸம்ப்ரமர்த்த3ன’
ஸாத3ரதி3 நமோ எம்பெ3 ஹிரண்யகாதி3 வித்3வம்ஸி
அப4க்தரிகெ3 து3க்க2வே ஈவி நீ ப4க்தேஷ்டதா3த
பக்திக்கு எதிரான குணங்களைக் கொண்டிருப்பவர்களை; ஹரித்வேஷிகளை; ஹரி பக்தர்களின் த்வேஷிகளை, தைத்யர்களை அழிக்கிறாய். ஸம்ப்ரமர்த்தனே உன்னை நான் பக்தியுடன் நமஸ்காரம் செய்கிறேன். ஹிரண்யகாதி அசுரர்களை நீ அழிக்கிறாய். அபக்தர்களுக்கு துக்கத்தினை கொடுக்கிறாய். பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிக்கிறாய்.
238. ஸ்ரீ அஹ:ஸம்வர்த்தகாய நம:
ஞானிப4ய ஹர ‘அஹஸ்ஸம்வர்த்தகனே’ நமோ
ஞானிக3ளிகெ3 ஸம்ஸாரப4ய ஶத்ருப4ய மத்து
மன காய தோ3ஷப4ய நிவாரணமாள்பி அஹ:
ஸம்வர்த்தக வந்தே3 காலப்ரவர்த்தக காலஸ்வாமி
ஞானிகளின் பயத்தினை போக்குபவனே. அஹ:ஸம்வர்த்தகனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஞானிகளுக்கு சம்சார பயம், எதிரிகளின் பயம், மற்றும் உள்ளம், உடல் ஆகியவற்றால் செய்யப்படும் தோஷங்களின் பயம் ஆகியவற்றை நிவாரணம் செய்கிறாய். காலபிரவர்த்தகனே. கால ஸ்வாமியே.
239. ஸ்ரீ வன்ஹயே நம:
ப3லநியாமக ப3லதா3தா நீனு ‘வன்ஹி’ நமோ
ப3லபூர்ண நீனு ஸர்வஜகத் விஶ்வவாஹகனு
எல்ல ஜக3த் விஶ்வவாஹக ஶேஷ ஆதா4ரவாயு
ப3லிஷ்ட2வாயு கூர்மகாதா4ர மஹாகூர்ம நீனு
வலிமையை கொடுப்பவனே. ‘வன்ஹியே’ உனக்கு என் நமஸ்காரங்கள். பலபூர்ணனே. அனைத்து உலகங்களையும் வியாபித்திருப்பவனே. உலகத்தை தாங்கியிருக்கும் சேஷனை, அவரை தாங்கியிருக்கும் வாயுவை, அந்த வாயுதேவரை தாங்கியிருக்கும் மகாகூர்மன் நீயே.
***
No comments:
Post a Comment