Saturday, January 14, 2023

#75 - 207-208-209 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

207. ஸ்ரீ ஸந்தி4மதே நம:

யக்ஞக3ளிந்த3 ஸம்யோக3மான்ஸந்தி4மான்நமோ நமோ

யக்3ஞப்4ருத் யக்ஞக்ருத் யக்ஞ யக்ஞபு4க் யக்ஞஸாத4

யக்ஞஸ்த விஷ்ணோஷரணெம்பெ3 ஸர்வஸ்வாமி நம்மொளிஹ

ஸம்யோக3 யக்ஞ நாம வாயுவந்தர்யாமி யக்ஞ ஸ்ரீ 

யக்ஞங்களால் மகிழ்பவனே ‘ஸந்திமான் உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞங்களை செய்பவன், செய்விப்பவன், அதனால் வரும் ஸாரத்தை ஏற்றுக் கொள்பவன் மற்றும் அந்த யக்ஞத்தில் இருப்பவனான விஷ்ணுவே உனக்கு நான் சரணடைகிறேன். அனைவருக்கும் ஸ்வாமியே. நமக்குள் இருப்பவனான, பாரதிரமண முக்யபிராணாந்தர்கதனான, ஸம்யோக யக்ஞனே. லட்சுமிதேவியின் தலைவனே. 

208. ஸ்ரீ ஸ்தி2ராய நம:

ஹஸ்தத3லி வஜ்ரஸ்தா2பகஸ்தி2நமோ நினகெ3

கஸ்த2 குஸ்த2 கே2சர ஸுராஸுர ஶிவவிதி4

ஸுஸ்திரரல்ல புட்டிபோபுரு நீ ஸ்தி2 அச்யுத

ஸ்வதந்த்ர நித்யனு அப்ராக்ருத முக்2 ஸ்தி2 நீனே 

கைகளுக்கு வலிமையைக் கொடுப்பவனே ‘ஸ்திரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பூமியில், தண்ணீரில், வானத்தில் சஞ்சரிக்கும் என அனைத்து ஜீவர்களும் / பிராணிகளும், மற்றும் தேவதைகள், ருத்ரர், பிரம்மன் ஆகியோரும்கூட நிலையானவர்கள் அல்ல, பிறப்பு இறப்பு கொண்டவர்கள். நீ மட்டுமே ஸ்திரமானவன். அழிவில்லாதவன். ஸ்வதந்த்ரன். நித்யன். அப்ராக்ருத சரீரம் கொண்டவன். ஸர்வோத்தமனான ஸ்திரன் நீயே. 

209. ஸ்ரீ அஜாய நம:

சோரரு து3ஷ்டரொளு பரஸ்பர வைமனஸு

பா4ரி 3லபெ4 உண்டுமாள்பஅஜநமோ நினகெ3

ஸுர நராதி33ளந்தெ ஜன்ம நினகி3ல்லவு

நரஸிம்ஹ ஆவிர்பா4வதி3ம் நஜாயதேதி அஜ: 

திருடர்கள், துஷ்டர்கள் ஆகியோருக்கும் பரஸ்பரம் கருத்து வேறுபாடு மற்றும் குழப்பங்களை உருவாக்கும் ‘அஜனே உனக்கு என் நமஸ்காரங்கள். தேவதைகள், மனிதர்கள் ஆகியோருக்கு இருப்பதைப் போல உனக்கு பிறப்பு என்பது இல்லை. நரஸிம்மனாக தோற்றம் கொண்டவனே. ‘ந ஜாயதேதி அஜ:’ - யார் செல்வதில்லையோ (இறப்பதில்லையோ), அவன் அஜன்.

***

No comments:

Post a Comment