ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
201. ஸ்ரீ பத்மனாபா4ய நம:
ஸிம்ஹ நாதா3தி3க3ளந்தெ பா4ஸநாம ‘பத்மனாப4’
அஹர்னிஶி நமோ நினகெ3 ஆதி3வராஹ நின்ன
ஸிம்ஹ நாத3 மஹாஸ்வனதி3 நீனெந்து3 திளிஸிதி3
பி3ரம்மனிகெ3 நாபி4கமலதி3 ஜன்மவித்தவனு
ஸிம்ஹ நாதத்தைப் போல கம்பீரமான கர்ஜனை கொண்டவனே. ‘பத்மனாபனே’ உனக்கு என்
இரவும் பகலுமான நமஸ்காரங்கள். ஆதிவராகனே. உன் சிம்ம நாதத்தால், உன்னைப் பற்றி தெரிவித்தாய். நாபி கமலத்திலிருந்து பிரம்மனை படைத்தவனே.
202. ஸ்ரீ ப்ரஜாபதயே நம:
ஜக3த்ப்ராணிபாலக ‘ப்ரஜாபதி’ நமோ நமோ
ஜக3த்தல்லி ப்ரஜெக3ள ஸ்வாமி நியந்த நீனேவெ
ஏக சித்ததி3 ஜபிபருக3ள ரக்ஷகானந்த3ப்ரத3
ஜக3த்காரணனு விஶ்வவ்யாபி நீனெ ஸர்வகர்த்தா
உலகின் அனைத்து பிராணிகளையும் காப்பவனே ‘ப்ரஜாபதியே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். உலகில் அனைத்து பிரஜைகளின் ஸ்வாமி நீயே. ஒரு மனதுடன் உன்னை ஜெபிப்பவர்களை
காப்பவர்களில் நீயே முதல்வன். இந்த உலகின் காரணன் நீயே. அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருக்கிறாய்.
அனைத்தையும் செய்பவன் நீயே.
203. ஸ்ரீ அம்ருத்யவே நம:
மாரகரு ஹிம்ஸகரூ இல்லத3வ ‘அம்ருத்யு’ நீ
ஶரணு நமோ ப4க்தரக்ஷக ஸ்ரீஶ நரஸிம்ஹ
ஶரணரிகெ3 ஜன்ம ஜராமரணாதி3 ஸம்ஸார
பரிஹரிஸி முக்தி அம்ருதத்வ நீடி3 பொரெவி
துன்பம் கொடுப்பவர். வெல்பவர் யாரும் இல்லாத ‘அம்ருத்யுவே’ உன்னை சரணடைகிறேன்.
பக்தர்களை காப்பவனே. ஸ்ரீலட்சுமி தேவியின் தலைவனே. நரசிம்மனே. உன்னை சரணடைந்தவர்களுக்கு,
அவர்களின் சம்சார பந்தனத்தை பரிகரித்து, முக்தி என்னும் அமிர்தத்தைக் கொடுத்து காக்கிறாய்.
***
No comments:
Post a Comment