Friday, December 1, 2023

#320 - 946-947-948 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

946. ஸ்ரீ ஸுவீராய நம:

அதி உத்தமனாகி3ருவிஸுவீர நமோ எம்பெ3

ஜக3த்ராண வாயுனல்லி ஸர்வவு ப்ரதிஷ்டிதவு

வாத நின்னல்லி ப்ரதிஷ்டி2தனு நீனு ஸர்வேஷ்வர

உத்தமோத்தமகு3த்தமகு3 உத்தம அனுத்தம 

மிகச்சிறந்த உத்தமனாக இருக்கிறாய். ஸுவீரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஜகத்ராணனான வாயுவில் அனைத்தும் ப்ரதிஷ்டிதமாக இருக்கின்றன. அவன் உன்னில் ப்ரதிஷ்டிதமாக இருக்கிறான். நீ ஸர்வேஸ்வரன். உத்தமோத்தமன். நீயே ஸர்வோத்தமன். 

947. ஸ்ரீ ருசிராங்க3தா3 நம:

ஶோப4 ஸித்3தி43னுருசிராங்க33நமோ எம்பெ3

ஶோப4 ருசிரமனோஹர அங்க3 ப்ரதா3

ஶோப4 மனோஹர அங்க3தா34ரண பூ4ஷித

ஶோப4ன த்வத் ப்ரத2மாங்க3வாயுன்ன இத்திஜக3க்கெ

மங்களங்களை அருள்பவனே. ருசிராங்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். மங்களகர மனோஹர அங்கங்களை கொடுப்பவனே. மங்களகர மனோஹர அங்கத்தின் ஆபரணங்களை தரித்தவனே. மங்களகரமான உன் அங்கங்கங்களிலிருந்து வாயுவை இந்த உலகிற்கு நீ அளித்தாய். 

948. ஸ்ரீ ஜனனாய நம:

ஜனன நீ ஸர்வோத்பத்தி ஸாத4னனு நமோ எம்பெ3

ஜன்மாதி3காரணனு நீ ஆத்33ரிம் ஜனன நீ

ஜனரன்ன நியாமன மாள்பி ஆத்33ரிம் ஜனன

ஜனரந்தெ அல்லதெ3 ஸ்வேச்செயிம் ப்ராது3ர்ப4விஸுவி 

ஜனனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நீ ஸர்வோத்பத்தி ஸாதனனே. ஜன்மாதி காரணன் நீயே. ஆகையால், நீ ஜனன என்று அழைக்கப்படுகிறாய். நீ மக்களை நியமனம் செய்கிறாய். ஆகையால், ஜனன என்று அழைக்கப்படுகிறாய். அந்த மக்களைப் போல இல்லாமல், ஸ்வேச்செயினால் நீ தோன்றுகிறாய். 

***


No comments:

Post a Comment