Thursday, December 14, 2023

#333 - 985-986-987 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

985. ஸ்ரீ ஆத்மயோனயே நம:

ப்ராணி ரக்ஷகஆத்மயோனி நமோ நமோ நினகெ3

வனஜாஸனாதி3 ஜீவர ஜன்மகாரண ஸ்வாமி

நின்ன ஸர்வ க்ரீடா3தி33ளன்னு ஸ்வதந்த்ரதி3ந்த3லி

நின்னிச்சாமாத்ரத3லெ சரிஸுவி ஸ்வரத பூர்ண 

ப்ராணிகளை காப்பவனே. ஆத்மயோனயே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மன் முதலான ஜீவர்களுக்கு ஜன்ம காரணன் நீயே ஸ்வாமி. உன்னுடைய அனைத்து செயல்களையும் ஸ்வதந்த்ரமாகவே உன்னுடைய இஷ்டத்தினாலேயே நீ செய்கிறாய். ஸ்வரத பூர்ணனே. 

986. ஸ்ரீ ஸ்வயம்ஜாதாய நம:

4க்தர அக்3ஞான களெது3 ஸக்3ஞானவன்ன நீ இத்து

உத்க்ருஷ்டவாகி3 வ்யக்த மாள்பிஸ்வயம்ஜாதனே நமோ

ஸ்வதந்த்ர தீ3பாத்3தீ3பாந்தரவத் அவதரிஸுவி

பூ4 பூ4தாபி4மான்யந்தர் நியாமகனு ஸர்வே 

பக்தர்களின் அஞ்ஞானத்தை களைந்து, ஸக்ஞானத்தை நீ அளித்து, மிகச்சிறப்பாக நீ தரிசனம் அளிக்கிறாய். ஸ்வயம்ஜாதனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்வதந்த்ரனே. நீ உன் இஷ்டப்படியே அவதரிக்கிறாய். பூத, பூதாபிமானியாக அவர்களில் நியாமகனாக இருப்பவனே. சர்வேஷனே. 

987. ஸ்ரீ வைகா2னாய நம:

விஶேஷத: ஶத்ரு நாஷமாடு3வைகா2னனே நமோ

வஸுதெ4 நீ மேலெத்துவாக3 தடெ33 தை3த்யன்ன

நீ ஸீளி ஸம்ஹார மாடி3தி3யோ ஆதி3வராஹனே

ஸுஸுக2 சின்மயவபுவே விதி4 மனு வரதா3 

எதிரிகளை அழிப்பவனே. வைகானனே உனக்கு என் நமஸ்காரங்கள். உலகத்தை நீ மேலே எடுக்கும்போது, உன்னை தடுத்த தைத்யனை நீ கிழித்து, கொன்றாய். ஆதிவராஹனே. சின்மயவபுவே. மனுவை காத்தவனே. 

***


No comments:

Post a Comment