Sunday, December 17, 2023

#336 - 994-995-996 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

994. ஸ்ரீ நந்த3கினே நம:

பூஜெ ஜப தப ஸ்தோத்ர யக்3ஞாதி33 மாடு3

யஜமானருள்ளவநந்த3கி நமோ 2ட்334ரனே

அஜனு பாத3தொளெது3 3ங்கா34 ஹேளுதிஹ

கி3ரிஜாஸஹ தி3வ்யவிஷ்ணு ஸஹஸ்ர நாமக3 

பூஜை, ஜப, தப, ஸ்தோத்ர, யக்ஞாதிகளை செய்யும் எஜமானர்களை கொண்டவனே. நந்தகினே உனக்கு என் நமஸ்காரங்கள். கட்கத்தை தரித்தவனே. பிரம்மன் உன் பாதங்களை கழுவி, கங்காதரன் என்று ருத்ரர் அழைக்கப்பட்டார். திவ்ய விஷ்ணு சஹஸ்ர நாமங்களை கொண்டவனே. 

995. ஸ்ரீ சக்ரிணே நம:

பு3த்3தி4தா3தனு நீனுசக்ரி நமோ எம்பெ3 நினகெ3

ஹ்ருத்திமிரவன்னு நீ களெது3 ஸுபு3த்3தி4யன்னித்து

ஸுதாரக பி3ம்ப3 விக்3ஞான அபரோக் ப்ரத2

வாதஸ்த2 நீ கொட்டு காய்தி3 ஸ்ரீ ஸ்ரீனிவாஸ ந்ருஸிம்ஹ 

அறிவு கொடுப்பவனே. சக்ரியே உனக்கு என் நமஸ்காரங்கள். என் மனதில் உள்ள இருட்டினை களைந்து, நற்புத்தியை கொடுத்து, அருள்பவனே. பிம்பனே. விக்ஞானனே. அபரோக்‌ஷத்தை அளித்து காப்பவனே. ஸ்ரீனிவாஸனே நரசிம்ஹனே. 

996. ஸ்ரீ ஶார்ங்கத4ன்வினே நம:

ஸ்தோத்ர விஶேஷதா4ரிஶார்ங்கத4ன்வி நமோ நினகெ3

ஶத்ரு நாஶக ஶார்ங்க34னுர்தா4ரி நீனு விஶேஷ

ஸ்தோத்ரஸ்த2 த்வத்ப3லதி3ம் அக்ஞானாதி3 ஶத்ரு ஶிஸி

4க்திகெ3 வேத3போ4த்3 ஸக்3ஞானவித்து பாலிஸுவி 

ஸ்தோத்ரம் செய்ய விசேஷமானவனே. ஷார்ங்கதன்வினே உனக்கு என் நமஸ்காரங்கள். எதிரிகளை அழிப்பவனே. ஷார்ங்க என்னும் தனுஸ் தரித்தவனே. விஸேஷ ஸ்தோத்ரங்களை கொண்டவனே. உன்னுடைய பலத்தினால் அக்ஞானாதி எதிரிகளை அழிக்கிறாய். பக்திக்கு வேதங்களால் சொல்லப்பட்ட ஞானத்தை அளித்து காக்கிறாய். 

***

No comments:

Post a Comment