ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
976. ஸ்ரீ யக்3ஞவாஹனாய நம:
யக்3ஞமாடு3வ யஜமானாதி3க3ளிகெ3 நீனு
வ்ருத்3யாதி3க3ளன்னு கொட்டு யக்3ஞவ ப்ரவர்த்திஸுவி
‘யக்3ஞவாஹனனே’ நமோ எம்பெ3 கர்த காரயிதா
நியாமகனு நீ யக்3ஞ கர்மவஹிஸுவர்க்கெ3
யக்ஞங்களை செய்யும் யஜமானர்களுக்கு நீ அனைத்து நலன்களையும் அளித்து, யக்ஞத்தை ப்ரவர்த்திக்கிறாய். யக்ஞ வாஹனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞத்தை, கர்மத்தை - செய்பவன், செய்விப்பவன், நியாமகன் நீயே.
977. ஸ்ரீ யக்3ஞக்ருத் யக்3ஞப்4ருதே நம:
யக்3ஞமாள்ப யஜமானனிகெ3 அன்னாதி3க3ளீவ
யோக்3ய உதா4ரிக3ளன்னு ரக்ஷணெ மாடு3வி நீனு
‘யக்3ஞக்3ருத் யக்3ஞப்4ருத்’ நமோ நினகெ3 வராஹ ஸ்வாமி
யக்3ஞரக்ஷக நீனு யக்3ஞ சரிஸிதி3 ஸ்ரீராம
யக்ஞங்களை செய்யும் யஜமானனுக்கு அன்னாதிகளை அளிக்கிறாய். யோக்ய உதாரிகளை காக்கிறாய். யக்ஞக்ருத் யக்ஞப்ருதனே உனக்கு என் நமஸ்காரங்கள். வராஹ ஸ்வாமியே. யக்ஞ ரக்ஷகனே. ஸ்ரீராமனே. நீயே யக்ஞங்களை செய்தாய்.
978. ஸ்ரீ யக்3ஞினே நம:
தா3ன நியாமகனு தா3ன ஒத3கி3ஸுவ ‘யக்3ஞி’
ஆ நமோ ஸமஸ்த யக்3ஞக3ளு நின்ன தெ3ஸெயிந்த3
நின்னாதீ4னவு எல்ல பூஜெ ஜப தப க்ரியெயு
நின்ன ப4க்தரிகெ3 யக்3ஞ ஸாத4ன ஸம்பத்து ஈவி
தானத்தை செய்விக்கிறாய். தானத்தை பெறச் செய்கிறாய். யக்ஞினே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து யக்ஞங்களும் உன்னிடமிருந்தே பிறக்கின்றன. உன்னுடைய அதீனமாகவே இருக்கின்றன. அனைத்து பூஜை, ஜப, தப, க்ரியைகள் ஆகியவற்றை செய்யும் உன் பக்தர்களுக்கு, யக்ஞ, ஸாதன, செல்வங்களை நீ அளிக்கிறாய்.
***
No comments:
Post a Comment