Tuesday, December 5, 2023

#324 - 958-959-960 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

958. ஸ்ரீ ப்ராணதா3 நம:

வ்ருத்ராதி3 தை3த்யர ப்ராண நாஶமாள்பிப்ராணத3னே

ஸதா3 நமோ நினகெ3 இந்த்3ரியக3தி சேஷ்டதா3தா

தா3எந்த3ரெ கொடு3வுது3 கடி3வுது3 ஶிபுது3

எந்து3 அர்த்த2  உண்டு ப்ராணத3 ஜீவன 3திப்ரத3 

வ்ருத்ர முதலான அசுரர்களின் ப்ராணனை நாசம் செய்தாய். ப்ராணதனே உனக்கு என் நமஸ்காரங்கள். இந்த்ரியங்களின் கதியை நியமனம் செய்பவனே. தா என்றால் கொடுப்பது, காப்பது, விலக்குவது என்னும் அர்த்தங்கள் உண்டு. ஜீவனின் கதியை கொடுப்பவனே. 

959. ஸ்ரீ ப்ரணவாய நம:

ப்ரக்ருஷ்டஸ்துத்ய மஹிமாவந்தப்ரணவனே நமோ

உத்க்ருஷ்ட ஸுக2ஞான பூர்ணஸ்வரூபனு ப்ரணவ

ஜாக்3ரதாதி3 ப்ரணயனனு நீ ஆத்33ரிம் ப்ரணவ

ஜாக்3ரத் விஶ்வ ஸ்வப்ன தைஜஸ ஸுப்தி ப்ராக்ஞ துரீயா 

மிகச்சிறந்த ஸ்துதிகளால் போற்றப்படுபவனே. மஹிமாவந்தனே. ப்ரணவனே உனக்கு என் நமஸ்காரங்கள். மிகச்சிறந்த சுக, ஞான, பூர்ண ஸ்வரூபனே. ப்ரணவனே. ஜாக்ரதா முதலான நிலைகளை நீ கொடுக்கிறாய். ஆகையால், நீ ப்ரணவ. ஜாக்ர நிலைக்கு விஸ்வ; ஸ்வப்ன நிலைக்கு தைஜஸ; ஸுப்தி நிலைக்கு ப்ராக்ஞ துரீயா. 

960. ஸ்ரீ 1ணாய நம:

வ்யவஹார ப்ரவர்த்திஸுவிபண நமோ நினகெ3

4விஷ்யோத்தர புராணாதி3 ஹேளிருவி ராஜகெ3

யாவப4க்தஏகேன துளஸி மாத்ரத3ளேனாபி

பூஜயேத் 4க்திபா4வேன தம் ரக்ஷாமீதி மத்பண:’ 

பக்தர்களின் வ்யவஹாரங்களை ப்ரவர்த்தனை செய்பவனே. பணனே உனக்கு என் நமஸ்காரங்கள். பவிஷ்யோத்தர புராணத்தில் நீ இவ்வாறு ராஜனிடம் சொல்லியிருக்கிறாய். எந்த பக்தன் துளசி மட்டுமே கொண்டு என்னை பக்தியுடன் பூஜிக்கிறானோ, அவனை நான் காக்கிறேன் என்றாய். 

***


No comments:

Post a Comment