ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
979. ஸ்ரீ யக்3ஞபு4ஜே நம:
ஶுப4ரஸாதி3 போகி3 நீனு ‘யக்3ஞபு4க்’ நமோ எம்பெ3
ஸத்ப4க்த அர்ப்பித யக்3ஞ பூஜெ நைவேத்4யாந்தஸ்த2
ஶுப4தம நின்னதே3 ஆத3 ரஸபு4ஞ்சிஸுவியோ
ஸத்ப4க்தரிகெ3 நின்னய ப்ரஸாதா3னுக்3ரஹ ஈவி
சுப ரசங்களை ஏற்றுக் கொள்பவனே. யக்ஞபுஜே உனக்கு என் நமஸ்காரங்கள். சத்பக்தர்கள் அர்ப்பிக்கும் யக்ஞ, பூஜை, நைவேத்யங்களில் இருக்கும் ஷுபதம ரஸ உன்னுடையதே. அந்த ஸ்வாக்ய ரஸத்தை ஏற்றுக் கொள்கிறாயே. ஸத்பக்தர்களுக்கு உன்னுடைய ப்ரஸாத அருளை அளிக்கிறாய்.
980. ஸ்ரீ யக்3ஞஸாத4னாய நம:
‘யக்3ஞஸாத4ன’ நீ ஶுப4ஸாத4ன நமோ நினகெ3
யக்3ஞ ஜபபூஜாதி3 மாள்பரிகெ3 ஸுக2வீவி
யக்3ஞ ஸாத4ன மந்த்ர, சரு, க்4ருத ஶுக் ஸ்ருவா இந்த2
த்3ரவ்யாதி3 ஸாத4னதொ3ளித்3து3 யக்3ஞவ மாடி3ஸுவி
யக்ஞஸாதனனே. ஷுப ஸாதனங்களை செய்விக்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞ, ஜப, பூஜாதி கர்மங்களை செய்பவர்களுக்கு சுகத்தை அளிக்கிறாய். யக்ஞ ஸாதனங்களான மந்த்ர, சரு, நெய், ஷுக்ஸ்ருவ ஆகிய த்ரவ்ய ஸாதனங்களில் இருந்து யக்ஞங்களை செய்விக்கிறாய்.
981. ஸ்ரீ யக்3ஞாந்தக்ருதே நம:
‘யக்3ஞாந்தக்ருத்’ நீ ஶுப4கர்மகள்கெ3 க3தி ஈவி
தோயஜாக்ஷனே நமோ நினகெ3 விஷ்ணோ வராஹ
தோயஜாபதி நீ யக்3ஞமாடி3 மாடி3ஸி ப4க்தரிம்
யோக்3ய ப2லவீவி யக்3ஞகா4தக தை3த்யர ஸீள்தி3
யக்ஞாந்தக்ருதனே நீ ஷுப கர்மங்களுக்கு கதியை அளிக்கிறாய். தாமரைக் கண்ணனே. உனக்கு என் நமஸ்காரங்கள். விஷ்ணுவே, வராகனே. தோயஜபதியே. நீ பக்தர்கள் மூலமாக யக்ஞங்களை செய்து, செய்வித்து, தகுந்த பலன்களை அளிக்கிறாய். யக்ஞங்களை தாக்கும் தைத்யர்களை நீ கொல்கிறாய்.
***
No comments:
Post a Comment