ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
964. ஸ்ரீ ப்ராணஜீவனாய நம:
ஜனரெல்லர வ்யாபாரகர்த ‘ப்ராணஜீவனனே’
ஆ நமோ நினகெ3 ஸதா3 அன்னமய ப்ராணமய
வனஜாஸன ருத்3ர இந்த்3ராதி3 ஸர்வஜீவரொளு
நீ அந்தர்யாமியாகி3த்து ஸர்வக்ருதி நடெ3ஸுவி
அனைத்து மக்களின் செயல்களை செய்பவனே / செய்விப்பவனே. ப்ராண ஜீவனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அன்னமயனே. ப்ராணமயனே. பிரம்ம, ருத்ர, இந்த்ராதி அனைத்து ஜீவர்களிலும் நீ அந்தர்யாமியாக இருந்து அனைத்து செயல்களையும் நடத்துகிறாய்.
965. ஸ்ரீ தத்வாய நம:
பு3த்3தி4ய கொடு3வி பு3த்3தி4யொளிருவி ‘தத்வம்’ நமோ
ஸத்தாப்ரத3னு நீனு தத்வம் எந்தெ3னிஸுவியோ
தத்வம் எம்பு3து3 அனாரோபிதவாகி3ஹ ஸ்வரூப
ஆத்4யாரோப அபவாத3தூ3ர நிர்தோ3ஷ ஆத்மா
புத்தியை கொடுக்கிறாய். புத்திக்குள் இருக்கிறாய். தத்வனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து அருளையும் கொடுப்பவனே. நீ தத்வம் என்று அழைக்கப்படுகிறாய். தத்வம் என்பது (ஆரோபித = சுமத்தப்பட்ட / பொருத்தப்பட்ட) உன் மேல் பொருத்தப்படாத ஸ்வரூபமாக உள்ளது. அபவாதங்கள் இல்லாதவனே. நிர்தோஷனே. ஆத்மனே.
966. ஸ்ரீ தத்வவிதே3காத்மனே நம:
தத்வஞானிக3ளிகெ3 முக்2ய ப3லாதி3க3ளன்னு
இத்துபாலிப ‘தத்வவிவேகாத்மா’ நமோ எம்பெ3
மித்யா மத்து விபரீதஞான விரோதி4 யதா2ர்த்த2
வாத3 ஸ்வஸ்வரூப ஞானவந்தரிகெ3 முக்2யஸ்வாமி
தத்வ ஞானிகளுக்கு முக்ய பலன்களைக் கொடுத்து காப்பவனே. தத்வ விவேகாத்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். மித்யா ஞான, விபரீத ஞான ஆகியவற்றிற்கு விரோதியான யதார்த்தமான ஸ்வஸ்வரூபத்தைக் கொண்ட ஞானவந்தருக்கு முக்ய ஸ்வாமியே.
***
No comments:
Post a Comment