ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
982. ஸ்ரீ யக்3ஞ கு3ஹ்யாய நம:
வேத3ரஹஸ்ய நீ ‘யக்3ஞகு3ஹ்யனே’ நமோ நமோ நினகெ3
ஶ்ருதிபோ4த்4ய கு3ஹ்ய நாம ‘யக்3ஞோவை விஷ்ணு:’ எம்பு3து3
வேத3தி3 தே3வகிஸுத கிருஷ்ண விஷ்ணுவே கு3ஹ்ய
வேத3போ4த்4ய ஸக்3ஞான கு3ஹ்ய வித்3யா நாமவான் ஸ்ரீஶ
வேத ரகசியனே நீ யக்ஞ குஹ்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞோவை விஷ்ணு: என்று ஸ்ருதி உன்னை ரகசியமானவன் என்று சொல்கிறது. தேவகிஸுத கிருஷ்ணனே. விஷ்ணுவே. வேதங்கள் போதிக்கும் ஸத்ஞானம் குஹ்யமானது. வித்யா என்னும் பெயர் கொண்டவனே. ஸ்ரீஷனே.
983. ஸ்ரீ அன்னாய நம:
ப்ராணிக3ளிகெ3 உபஜீவ்யனாகி3ஹ அன்ன நமோ
தின்னுவ ‘அன்ன’ அபி4மானி ஜீவ தே3ஹ ஈமூரர
அந்தர்யாமி ஆஶ்ரயாதி3 அன்ன நாம அனிருத்3த4
‘அன்னாத்3வை ப்ரஜாயந்தே’ இந்த2 ப3ஹுவாக்யக3ள்
ப்ராணிகளுக்கு உபஜீவ்யனாக இருக்கும் அன்னனே உனக்கு என் நமஸ்காரங்கள். நாம் உண்ணும் அன்னத்தின் அபிமானியே. அன்ன, ஜீவ, தேஹ இந்த மூன்றின் அந்தர்யாமியே. அன்ன நாம அனிருத்தனே. அன்னாத்வை ப்ரஜாயந்தே என்று வேதங்கள் சொல்கின்றன.
984. ஸ்ரீ அன்னதா3ய நம:
அன்னதா3தனு ப4க்தரிகெ3 மாத்ர நீ, த்3வேஷிக3ளிகெ3
அன்னதா3தனல்ல மோக்ஷ ஸுக2வு த்3வேஷிகெ3 அலப்4ய
‘அன்னாத3’ நமோ போ4க்த்ரு போ4க்3யரூப ஸுக2மயனு
பூர்ண அன்ன ரஸமய ப4க்தரிகெ3 மாத்ர லப்4ய
பக்தர்களுக்கு அன்னதாதனே. த்வேஷிகளுக்கு அன்னங்களை கொடுப்பவன் அல்ல. த்வேஷிகளுக்கு மோட்ச சுகம் கிடைப்பதில்லை. அன்னாதனே உனக்கு என் நமஸ்காரங்கள். போக்த்ருவே. போக்யரூபனே. ஸுகமயனே. பக்தர்களுக்கு, பூர்ண அன்ன ரஸமயங்களை கிடைக்கச் செய்கிறாய்.
***
No comments:
Post a Comment