Friday, December 8, 2023

#327 - 967-968-969 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

967. ஸ்ரீ ஜன்ம ம்ருத்யு ஜராதி1கா3 நம:

ஜன்ம ம்ருத்யு ஜராதி1கா3மோத3மய தே3ஹி நமோ

ஜன்மஜராமரணாதி3 தோ3 அதிக்ரமிஸித3

அம்ருத அச்யுத அப4 அவ்யயனு நீ ஸதா3

அமல ஸத்கல்யாணதம ஶாஶ்வத ஸுக2 ஸ்வரூப 

ஜன்ம ம்ருத்யு ஜராதிகனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்தமயமான தேகத்தை கொடுப்பாயாக. பிறப்பு, இறப்பு ஆகிய தோஷங்களை மீறியவனே. அம்ருதனே. அச்யுதனே. அபயனே. அவ்யயனே. நீ எப்போதும் தொடர்ச்சியான ஸத்கல்யாண குணங்களைக் கொண்டவன். நிரந்தரமானவனே. சுக ஸ்வரூபனே. 

968. ஸ்ரீ பூ4ர்பு4வஸ்வஸ்தரவே நம:

த்ரிலோகத3லிருவ ஜனரன்ன நியமிஸுவ

ஸ்ரீலக்ஷ்மீபதிபூ4ர்பு4வஸ்வஸ்தரு நமோ நினகெ3

மாலோல நீ பூர்ணபரமைஶ்வர்யானந்த3 ஆனந்த3

ஶீல 4க்தரிகெ3 கல்பத்3ருமோபம வரதா3தா 

மூன்று உலகங்களிலும் இருக்கும் ஜீவர்களை நியமனம் செய்யும் ஸ்ரீலட்சுமிபதியே. பூர்புவஸ்வஸ்தரனே உனக்கு என் நமஸ்காரங்கள். மாலோலனே. ஸ்ரீபூர்ண பரமைஸ்வர்யானந்தனே ஆனந்தஷீலனே. பக்தர்களுக்கு கல்பதருவைப் போல வரங்களை அளிப்பவனே. 

969. ஸ்ரீ தாராய நம:

தாரகனேதார நமோ ப்ரணவ ப்ரதிபாத்3யனே

பரிபரி ஸம்ஸார பாதெ43ளிந்த3லி ஆகா33

தா1ரிஸுவுத3ல்லதெ3 ஜன்மஜராமரணாதி3யிம்

தாரணமாடி3 நீ ஶாஶ்வத மோக்ஷஸுக2 வீவி 

தாரகனே. தாரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ப்ரணவ ப்ரதிபாத்யனே. பற்பல சம்சார துக்கங்களிலிருந்து அவ்வப்போது எங்களை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், பிறப்பு இறப்பு ஆகியவற்றிலிருந்தும் நீ எங்களை விலக்கி, நிரந்தரமான மோட்சசுகத்தையும் கொடுக்கிறாய். 

***


No comments:

Post a Comment