Saturday, December 9, 2023

#328 - 970-971-972 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

970. ஸ்ரீ ஸவித்ரே நம:

ஸவிதா நீனு ஸூர்யஸத்3ருஷபி3ம்ப3னு நமஸ்தே

ஸர்வஜக3ஸ்ருஷ்டி மாடு3வி ஆத்33ரிந்த3ஸவிதா

ஜீவஸ்ருஷ்டிவாரி நிமித்த ப்ரதிபி3ம்ப33ந்தெயு

ஸர்வஜட3 ஸ்வர்க்க3 4 மண்ணிந்த3 மாள்ப தெரதி3 

ஸவித்ரே. நீ ஸூர்யனைப் போன்றதான பிம்பனாக இருக்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து உலகங்களையும் நீ படைக்கிறாய். ஆகையால், ஸவிதா ஆகிறாய். ஜீவஸ்ருஷ்டியை உன்னுடைய ப்ரதிபிம்பமாக ஆக்குகிறாய். அனைத்து ஜட, ஸ்வர்க்க ஆகியவற்றை மண்ணிலிருந்து பானை உருவாக்குவதைப் போல உருவாக்கினாய். 

971. ஸ்ரீ ப்ரபிதாமஹாய நம:

அஸுர ஹந்தா நீனுப்ரபிதாமஹனே நமஸ்தே

பி3ஸஜனாப4னே நீனு ஜக3த் பிதாமஹனபிதா

பி4ஸஜஸம்ப4 பிதனாத்34ரிம் ப்ரபிதாமஹ

அஸுரர அளிவி 4க்தப்ரபாலக நீ மஹான் 

அசுரர்களை கொல்பவனே. ப்ரபிதாமஹனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பத்மனாபனே.  ஜகத் பிதாமஹனின் தந்தையே. பிரம்மனின் தந்தை ஆகையால், ப்ரபிதாமஹ. அசுரர்களை அழிக்கிறாய். பக்தர்களை காக்கிறாய். நீ மஹான். 

972. ஸ்ரீ யக்3ஞாய நம:

ஸோசித கர்தவ்ய கர்மத்யாக3மாள்பி து3ஷ்கர்மி

நீசரன்ன மாரண மாடுவயக்3 நமோ எம்பெ3

ஆசாரவந்த ஸஜ்ஜன க்ருத ஜப, பூஜா, த்4யான

நிஸ்சல 4க்தியிம் மாள்புது3 ஸ்வீகரிஸுவி யக்3 

கடமைகளை, கர்மங்களை த்யாகம் செய்ய வைக்கிறாய். துஷ்கர்மியே. நீசர்களை அழிப்பவனே. யக்ஞனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஆசாரவந்தனான ஸஜ்ஜனர்கள் செய்யும் ஜப, பூஜா, த்யான, நிஸ்சல பக்தி ஆகியவற்றை ஏற்றுக் கொள்கிறாய். யக்ஞனே. 

***


No comments:

Post a Comment