ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
973. ஸ்ரீ யக்3ஞபதயே நம:
தை3த்யரன்ன பதன மாடு3வ ‘யக்3ஞபதி’ நமோ
ப்4ருத்ய ஸத்ப4க்த பாலகஸ்வாமி நீ யக்3ஞபதி
ப4க்தக்ருத ஜப, பூஜா, தப, யக்ஞ, ப2லதா3தா
ஶ்ரத்3தெ4யிந்த3 அன்வேஷ்டவ்ய ஸர்வக்3ஞ ஸர்வ நியந்தா
தைத்யர்களை அழிக்கும் யக்ஞபதயே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பக்தர்களை காக்கும் ஸ்வாமியே. யக்ஞபதியே. பக்தர்கள் செய்யும் ஜப, பூஜா, தப, யக்ஞ ஆகியவற்றின் பலன்களை தருபவனே. சிரத்தையுடன் தேடப்படுபவனே. ஸர்வக்ஞனே. அனைத்தையும் நியமனம் செய்பவனே.
974. ஸ்ரீ யஜ்வனே நம:
யக்3ஞப்ரவர்த்தகனே ‘யக்3ஞா’ நமோ நமோ நினகெ3
ஸ்வயம் நீனு அஶ்வமேதா4தி3 யக்3ஞக3ளன்னு கெ3ய்தி3
அயோத்4யா ராமாவதாரத3லி லோக ஶிக்ஷணக்கெ
யக்3ஞமாடி3 தோரிஸிதி3 உதா3ர த3க்ஷிணெ கொட்டு
யக்ஞங்களை ப்ரவர்த்தகம் செய்பவனே. யக்ஞனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நீயே அஸ்வமேதாதி யக்ஞங்களை செய்தாய். அயோத்யையில் ராமாவதாரத்தில் உலகத்தை திருத்துவதற்காக, யக்ஞங்களை செய்து காட்டினாய். அப்போது அங்கு அபாரமான தக்ஷிணைகளையும் கொடுத்தாய்.
975. ஸ்ரீ யக்ஞாங்கா3ய நம:
பூஜ்யவாத3 ப3லதி3ம் பர்வதவ நடு3கி3ஸுவி
பூஜ்யதம ஸர்வேஶான ‘யக்3ஞாங்க3’ நமோ நினகெ3
யக்3ஞமாள்புது3 நின்ன ப்ரீதி உத்3தே3ஶ ஆத்3த3ரிந்த3
யக்3ஞாங்க3 எந்தெ3னிஸுவி யக்3ஞ வராஹஸ்வாமி
அபாரமான பலத்தினால் பர்வதங்களை நடுங்கச் செய்கிறாய். பூஜ்யனே. ஸர்வேஸனே. யக்ஞாங்கனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நீ ப்ரீதி ஆகவேண்டும் என்ற நோக்கத்தினாலேயே யக்ஞங்களை செய்கிறோம். யக்ஞாங்க என்று அழைக்கப்படுகிறாய். யக்ஞ வராஹ ஸ்வாமியே.
***
No comments:
Post a Comment