ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
955. ஸ்ரீ ப்ரஜாக3ராய நம:
ப4க்தர நித்3ராக்ஷய மாடு3வி ‘ப்ரஜாக3ர’ நமோ
ப4க்தர தமோன்னாஹ க2ண்டி3ஸி க்ஷயமாள்பி விஶ்வ
ப4க்தரிகெ3 ஶ்ரவண மனன த்4யானேக்ஷனகர்தா
வஸ்துக3 ஸ்வஶுப4ரஸ போ4க்த்ரு ஆத்மா அந்த்ராத்மா
பக்தர்களை காக்கிறாய். ப்ரஜாகரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களின் தமஸ்ஸினை கண்டித்து, நலன்களை அருள்கிறாய். உலக பக்தர்களுக்கு ஸ்ரவண, மனன, த்யானங்களை செய்விப்பவனே. வஸ்துகளில் உள்ள சுப ரஸங்களை ஸ்வீகரிப்பவனே. ஆத்மனே. அந்தராத்மனே.
956. ஸ்ரீ ஊர்த்4வகா3ய நம:
உத்தமாஶ்வக3ளிந்த3 ஹோகு3வவ ‘ஊர்த்வக3’ நமோ
உத்க்ருஷ்ட ஶைப்ய ஸுக்3ரீவ ப3லாஹக மேக4புஷ்ட
குது3ரெக3ளு நால்கு ப3ஹுவேக3வாத3ந்தஹுக3ளிந்த3
ஸ்ரீதே3வி ருக்மிணி அவதார ஸ்த2ளக்கெ நீ ஹோதி3
உத்தமமான குதிரைகளில் சவாரி செய்பவனே. ஊர்த்வகனே உனக்கு என் நமஸ்காரங்கள். மிகச் சிறந்ததான ஷைப்ய, சுக்ரீவ, பலாஹக, மேகபுஷ்ட ஆகிய குதிரைகள் நான்கும் அபாரமான வேகமாக செல்வதால், அதன் மூலம், ஸ்ரீதேவி, ருக்மிணி ஆகியோரின் அவதார ஸ்தளத்திற்கு நீ சென்றாய்.
957. ஸ்ரீ ஸப்ததா4சாராய நம:
மித்2யாஞானி அபக3ம ‘ஸப்ததா4சாரனே’ நமோ
‘ஸப்த ப்ராணா: ப்ரப4வந்தி தஸ்மாத் ஸப்தஸப்த’ மத்து
‘ஆத்மாயாம் ருதே ராஜன் பரஸ்யானுப4வாத்மன:
நக4டேத்தத3ர்த்த2 ஸம்ப3ந்த4: ஸ்வப்னேத்3ருஷ்டரிவாஞ்சஸா’
மித்யா ஞானத்தை விலக்குபவனே. ஸப்ததாசாரனே உனக்கு என் நமஸ்காரங்கள். ‘ஸப்தப்ராணா:’, ‘ஆத்மாயாம் ருதே’ ஆகிய ஸ்ருதிகள் உன்னை இவ்வாறு புகழ்கின்றன.
***
No comments:
Post a Comment