ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
997. ஸ்ரீ க3தா3த4ராய நம:
ஸ்துதிஸுவர அஶ்வக3ளிந்த3 ஹோகு3வவ நீனு
‘க3தாத4ர’ நமோ நினகெ3 ஸ்துதிப ப4க்தர்க3ள
இந்த்3ரிய ப்ராணாதி3 அஶ்வத்த2 நியாமக ஸ்ரீஶ நீ
மோத3ப்ரஸாத3 ஹொந்தொ3 மார்க்க3தி3 நடெ3ஸுவி வாயுஸ்த2
துதிப்பவர்களின் இந்திரியங்களால் செல்பவனே. கதாதரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னை துதிக்கும் பக்தர்களின் இந்த்ரிய ப்ராணாதி அஷ்வத்தங்களை நியமனம் செய்பவனே. ஸ்ரீஷனே. உன்னுடைய ப்ரஸாதத்தை அடையும் வழியில் நீயே எங்களை நடத்துகிறாய். வாயு அந்தர்யாமியாக இருப்பவனே.
998. ஸ்ரீ ரந்தா2ங்க3பாணியே நம:
ஸுக2ப்ராபக புத்ராதி3ப்ரத ‘ரதா2ங்க3பாணியே’
ஸ்ரீகளத்ரனே நமோ தே3வகிபுத்ரனே ஶரணு
சக்ரபாணி நீ க3ர்ப்ப3ரக்ஷிஸி உத்தரெகெ3 புத்ர
பரீக்ஷிதன்ன கொட்டு கலி நிரோத4 மாடி3ஸிதி3
சுகத்தை அருள்பவனே. புத்ராதிகளை அருள்பவனே. ரதாங்கபாணியே. ஸ்ரீகளத்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். தேவகிபுத்ரனே. சக்ரபாணியே. உத்தரையின் கர்ப்பத்தை காத்தவனே. பரீக்ஷிதனுக்கு அருள் புரிந்து, கலியினை விலக்கினாயே.
999. ஸ்ரீ அக்ஷோப்4யாய நம:
க்ஷோபெ4 இல்லத3 புத்ராதி3மான் ‘அக்ஷோப்4யனே’ நமோ
க்ஷோபெ4 சாஞ்சல்யவில்ல த்வத்புத்ர வாயுதே3வனிகெ3
ஸுபூர்ணப3லஞானானந்த3 ஸ்வரூப நரஸிம்ஹ
ஶுப4தம கதா2ஷய நிர்விகார அனிர்விண்ண
அழிவில்லாத மக்களை கொண்டவனே. அக்ஷோப்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய மகனான வாயுதேவனுக்கு அழிவு, சாஞ்சல்யம் இல்லை. பூர்ணஞானானந்த ஸ்வரூபனே நாரஸிம்ஹனே. ஷுபதமமான நற்கதைகளை கொண்டவனே. நிர்விகாரனே. துக்கங்கள் அற்றவனே.
1000. ஸ்ரீ ஸர்வப்ரஹரணாயுதா4ய நம:
ப4க்தர்கெ3 கொட3லிக்கெ அஸுரர த4னாபஹார
கெ3ய்து3 ப4க்தரன்ன போஷிஸுவ ஜீவாதா4ரி ஹரே
மாத4வனே ‘ஸர்வப்ரஹரணாயுத4’ நமோ ஸர்வ
ஶத்ரு ஆயுத4 ஹரண ‘ஸர்வப்ரஹரணாயுத4’
பக்தர்களுக்கு கொடுப்பதற்கு அசுரர்களின் தனங்களை அபஹாரம் செய்பவனே. அதன் மூலம் பக்தர்களை காப்பவனே. ஜீவனை அருள்பவனே. ஹரே, மாதவனே. ஸர்வப்ரஹரணாயுதனே உனக்கு என் நமஸ்காரங்கள். எதிரிகளின் ஆயுதங்களை அழிப்பவனே. ஸர்வப்ரஹரணாயுதனே.
***
No comments:
Post a Comment