ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
894. ஸ்ரீ அனேகதா3ய நம:
தத்கால ஆகா3க3 பே3காத்3த3க3ளன்னு பா3ஹுள்யதி3
நீ கொடு3வி ‘அனேகத3னே’ முக்தரிகெ3 ஸர்வதா3
ஸுகா2தி3க3ளன்னு ஸர்வபோ4க்3யக3ள ஈவி நமோ
ஸ்ரீகர நாராயண ராமப4த்3ர வேங்கடபதே
இவ்வுலகில், அவ்வப்போது வேண்டியவற்றை நீ கொடுக்கிறாய். அனேகதனே. முக்தர்களுக்கு எப்போதும் சுகங்களை, அனைத்து போக்யங்களை நீ கொடுக்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீகர நாராயணனே. ராமபத்ரனே. வேங்கடபதியே.
895. ஸ்ரீ அனுஜாய நம:
ஸமீப ஆவிர்பூ4த ஸ்தோமாதி3 வேத3வுள்ளவனு
ரமாபதியே ‘அக்3ரஜனே’ நமோ எம்பெ3 நினகெ3
பி3ரம்மதே3வ ஸ்ருஷ்டி ஆகு3வுத3கெ பூர்வபுருஷ
ஆஹ்வயதி3 நீ ஆவிர்ப்ப4விஸிதி3 ஸ்வேச்செயிம் தே3வ
வேதங்கள் உன்னையே புகழ்கின்றன. ரமாபதியே. அக்ரஜனே. அனுஜனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மதேவ ஸ்ருஷ்டி ஆவதற்கு முன்னர் இருந்தவன் நீ. நீ உன் இஷ்டத்திற்கு ஏற்பவே தோன்றுகிறாய். தேவனே.
896. ஸ்ரீ அனிர்விண்ணாய நம:
அன்னாதி3லாப4 வீவி ‘அனிர்விண்ண’ நமோ நினகெ3
ஆனந்த3ஞானாதி3 கல்யாணதம கு3ணஸிந்து4 நீ
நின்ன ப4ஜிஸுவ ப4க்தரிகெ3 க்லேஶ பரிஹார
ஞானப்ரத ஸுக2ப்ரத3னாகி3 ஒத3கு3வி ஸ்ரீஶ
அன்னாதி அனைத்து நலன்களையும் அருள்பவனே. அனிர்விண்ணனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்த ஞானாதி கல்யாண குணங்களின் ஸிந்துவே. உன்னை பஜிக்கும் பக்தர்களின் துக்கங்களை பரிகரிப்பவனே. அவர்களுக்கு ஞான, சுகத்தை அருள்பவனே. ஸ்ரீஷனே.
***
No comments:
Post a Comment