ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
922. ஸ்ரீ க்ஷமிணாம்வராய நம:
ஸஹன ஶக்திமந்தரலி ஶ்ரேஷ்ட ‘க்ஷமிணாம்வர’
அஹர்னிஶி நமோ ஸ்வாமி க்ருபெயா குருமாம் க்ஷமா
மஹீபதியெ க்ஷமா ஸிந்து4 ப4க்தாபராத4 ஸஹிஷ்ணோ
மஹாத3யதி3 ஈயெனகெ3 ஸத்யரதி ப4க்த்யாதி3ய
காக்கும் சக்தி மந்த்ரங்களில் ஸ்ரேஷ்டனே. க்ஷமிணாம்வரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். கருணையுடன் என்னை மன்னிப்பாயாக. மஹீபதியே. கருணைக்கடலே. பக்தர்களின் அபராதங்களை மன்னிப்பவனே. மிகவும் கருணையுடன் எனக்கு ஸத்யத்தின் வழியை காட்டுவாயாக.
923. ஸ்ரீ வித்3வத்தமாய நம:
லாப4வந்தரலி ஶ்ரேஷ்ட ‘வித்4வத்தம’ நமோ எம்பெ3
ஶுப4தம கதா2ஶயனு பூர்ணஞானாத்மா நீனு
ஈ பூ4மியலி தோரி நரனந்தெ நடிஸிதி3யோ
ஸுப்4ராஜ ஸர்வக்3ஞ த3த்த ஹயாஸ்ய ஸ்ரீகிருஷ்ணௌ
அனைவரையும் விட சிறந்தவனே. வித்வத்தமனே உனக்கு என் நமஸ்காரங்கள். மங்களங்களை தரும் சுப சரித்திரங்களை கொண்டவனே. பூர்ணஞானாத்மனே. நீ இந்த பூமியில் மனிதனைப் போல அவதாரம் செய்து நடந்தாயே. ஸர்வக்ஞனே. தத்தனே. ஹயாஸ்யனே. ஸ்ரீகிருஷ்ணர்களே (யாதவ & வாஸிஷ்ட).
924. ஸ்ரீ வீதப4யாய நம:
நிர்ப4யனாத3வனு ‘வீதப4ய’ நமோ நினகெ3
அப4யனெந்தெ3னிஸுவி ப4யரஹிதனாத்3த4ரிம்
நிர்ப4யனு ப்ராக்ருததே3ஹ ரஹிதனு சின்மய
ஶோப4ன அப்ராக்ருத பூர்ண நிர்தோ3ஷ ஆனந்த3மய
பயம் அற்றவனே. வீதபயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அபய என்று அழைத்துக் கொள்கிறாய். பயம் இல்லாதவன் ஆகையால் நீ நிர்பயன். ப்ராக்ருத தேகம் இல்லாதவன். சின்மயனே. அப்ராக்ருத பூர்ணனே. நிர்தோஷனே. ஆனந்தமயனே.
***
No comments:
Post a Comment