ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
937. ஸ்ரீ ஜிதமன்யவே நம:
ஜராதி3தோ3ஷக3ளு நின்ன ஸமீபதி3 பா3ரது3
நிராமய ‘ஜிதமன்ய’ நமோ நமோ நமோ எம்பெ3
அப்ராக்ருத ஆனந்த3ஞான தே3ஹனு ஸ்ரீய:பதி
க்ரூர தை3த்யரனு ஶத்ருக3ளனு ஜயிஸித3வ
ஜராதி தோஷங்கள் உன் அருகிலேயே வராது. நிராமயனே. ஜிதமன்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அப்ராக்ருதனே. ஆனந்த ஞான தேஹனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. க்ரூர தைத்யர்களை, எதிரிகளை, வென்றவனே.
938. ஸ்ரீ ப4யாபஹாய நம:
ப4யாபஹனு நீ வேத3 ப்ரதிபாத்3யனு ஹேமாதி3
த்3ரவ்யக3ளிந்த3 ஸுக2 ஒத3கி3ஸுவி நமோ எம்பெ3
‘ப4யாபஹனு’ நீ ப4யபரிஹார மாடு3வியோ
ப4யாக்2ய ஸம்ஸார தே3ஹாபி4மான களெது3 காய்தி3
பயங்களை விலக்கியவனே. வேதங்களால் போற்றப்படுபவனே. தங்கம் முதலான த்ரவ்யங்களை அருளி சுகத்தை அருள்கிறாய். பயாபஹனே. உனக்கு என் நமஸ்காரங்கள். என் பயங்களை பரிகரிப்பாயாக. சம்சார மற்றும் தேக அபிமானத்தை களைந்து, என்னை காப்பாயாக.
939. ஸ்ரீ சதுரஸ்ராய நம:
யாசிபுத3கெ யோக்3ய ஸுக2வன்ன ஒத3கி3ஸுவி
ஹே ‘சதுரஸ்ரனே’ நமோ எம்பெ3 பூர்ணஸுக2மயனே
ப்ரோச்சவாத3 ப4க்தி ஒந்த3ன்னெ இத3ரரிகி3ந்தலி
ஹெச்சாகி3 கொடு3 என்னெ ஹனுமகெ3 கொட்டி ஸ்ரீராம
வேண்டுவதற்கு யோக்யனே. சுகத்தை அருள்வாயே. ஹே சதுரஸ்ரயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பூர்ண சுகமயனே. தூய்மையான பக்தி ஒன்றையே, மற்றவர்கள் அனைவரைவிட எனக்கு அருள்வாயாக. ஹனுமனுக்கு கொடுத்ததைப் போல. ஸ்ரீராமனே.
***
No comments:
Post a Comment