ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
913. ஸ்ரீ ஊர்ஜிதஶாஸனாய நம:
து3ர்ஜனரிகெ3 ப்ரக்ருஷ்ட ஶாஸன மாடு3வவனு
‘ஊர்ஜிதஶாஸன’ நமோ ஸ்வராட் ஸார்வபௌ4ம
அஜ ஶிவேந்த்3ரார்காதி3க3ளு நின்ன ஆக்ஞா தா4ரகரு
ஈ ஜக3த்திலி க்ரியா நின்ன ஶாஸனதி3 மாள்பரு
துர்ஜனருக்கு துன்பங்களை கொடுத்து அவர்களை ஆள்பவனே. ஊர்ஜிதஷாஸனனே உனக்கு என் நமஸ்காரங்கள். வீரமுள்ளவனே. ஸார்பௌமனே. அஜனே. சிவ, இந்த்ர, சூரியன் ஆகியோர் உன் ஆணைப்படியே நடக்கின்றனர். இந்த உலகில் அனைத்து செயல்களும் உன்னுடைய ஆணைப்படியே அனைவரும் செய்கின்றனர்.
914. ஸ்ரீ ஶப்3தா3திகா3ய நம:
து3ர்ஜனக்ருத ஆஹ்வான ஶப்4த3வ லக்ஷ்யமாட3தெ3
த்யஜிஸி அதிக்ரமிப ‘ஶ3ப்3தா3திக3’ நமோ எம்பெ3
ரிக்3 யஜு ஸ்ஸாமாஹ்யத2ர்வணாத்யாக3மக்கு அமித
நிஜஶக்தி ப3லஞான ஸுகா2த்3ய அக3ணிதகு3ண
துர்ஜனர்கள் செய்யும் பூஜைகள் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து அவர்களை அழிக்கும் ஷப்தாதிகனே உனக்கு என் நமஸ்காரங்கள். ரிக், யஜு, ஸாம, அதர்வண வேதங்கள் புகழ்வதைவிட அபாரமான உண்மையான சக்தி, பல, ஞான, சுக ஆகியவற்றை கொண்டவனே. எண்ணிலடங்காத குணங்களை கொண்டவனே.
915. ஸ்ரீ ஶப்4த3ஸஹாய நம:
வேதா3த்3யபி4மந்த்ரித ஸோமத3ல்லிருவந்தவனு
‘ஶப்4த3ஸஹ’ நினகெ3 நமோ நமோ யக்3ஞவராஹ
ப4க்தருமாள்ப வேத3மந்த்ர ஸ்தோத்ர கரதாட3ன
இந்த2ஶப்3த3க3ள ஸஹன மாடு3வி ஶப்3த3 ஸஹ
வேதங்களால் அபிமந்த்ரணம் செய்யப்பட்ட ஸோமத்தில் இருப்பவனே. ஸப்தஸஹனே உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞ வராஹனே. பக்தர்கள் செய்யும் வேத மந்த்ர, ஸ்தோத்ர, கைதட்டல் ஆகிய சப்தங்களை ஏற்றுக் கொள்பவனே. ஸப்தஸஹனே.
***
No comments:
Post a Comment