Monday, November 27, 2023

#316 - 934-935-936 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

934. ஸ்ரீ பர்யவஸ்தி2தாய நம:

நின்னய ஸ்வரூபத4ர்மக3ளு விகாரஹொந்த3தெ3

பூர்ணத்வதி3ந்த3 இருவவனுபர்யவஸ்தி2தனே

நமோ ஸதா3 நினகெ3 நீ என்னன்ன ஸத்யத4ர்ம

ஞான 4க்திரதனன்னாகி3 மாடோ3 த்வத்ப்ரஸாத3 ஈயோ 

உன்னுடைய ஸ்வரூப தர்மங்கள், எவ்வித மாற்றங்களையும் அடையாமல், முழுமையாக இருக்கின்றன. பர்யவஸ்திதனே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ என்னை ஸத்யதர்ம ஞான பக்தி உள்ளவனாக செய்வாயாக. உன்னுடைய ப்ரஸாதங்களை அருள்வாயாக. 

935. ஸ்ரீ அனந்தரூபாய நம:

அபரிமித ரூப உள்ளஅனந்தரூப நீனு

த்வத்பாத3 ஸரஸீருஹக3ளிகெ3 நமோ எம்பெ3னு

அபரிமிதானந்த3ரூப நித்ய அவினாஶியு

ஸ்ரீ பத்4மஜாதி33ளிகு3 3ணனெகெ3 அமிதவு 

அபாரமான ரூபங்களை கொண்ட அனந்தரூபனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பாதங்களை நான் வணங்குகிறேன். அபரிமித ஆனந்த ரூபியே. நிரந்தரமானவனே. அழிவில்லாதவனே. ஸ்ரீபிரம்மாதிகளுக்கும், தேவர்கள் குழுவிற்கும் விட சிறந்தவனே. 

936. ஸ்ரீ அனந்தஸ்ரீயே நம:

அபரிமித காந்தியுள்ள ஸ்வரூப தேஜ:புஞ்ச

தீ3ப்த தே3வதெக3ளிகு3 தேஜஸ்ப்ரதா3தனு ஸ்ரீ

நப4சர ஸூர்யாதி3பா4ஸகனு நாஶவில்லத3

ஸுப்4ராஜ நித்யபூர்ணஜ்யோதிஅனந்தஸ்ரீயே நம: 

அபாரமான ஒளி பொருந்திய ஸ்வரூப தேஜஸ் கொண்ட தேவதைகளுக்கும் தேஜஸ் அருள்பவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. வானில் ஒளிரும் சூரியனையும் ஒளிர்விப்பவனே. அழிவில்லாத நித்ய பூர்ண ஜ்யோதி ரூபியே. அனந்தஸ்ரீயே. 

***


No comments:

Post a Comment