Saturday, November 18, 2023

#307 - 907-908-909 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

907. ஸ்ரீ ஸ்வஸ்திபு4ஜே நம:

சரு க்4ருதாதி33 போ4க்தாஸ்வஸ்திபு4க் நமோ எம்பெ3

ஸர்வதா3 பூர்ண ஆனந்த33 பு4ஜிஸுவவனு நீனு

பரிபரிஸுக2 போ4க்3 ஸார்வதொ3ளகு3 நின்னய

அரதூ3 ஸ்வாக்2யரஸ இருவுத3ன்னு உம்பி3 நீ 

(ஹோமங்களில் போடப்படும்) சரு, க்ருத ஆகியவற்றை ஏற்றுக் கொள்பவனே. ஸ்வஸ்திபுஜே உனக்கு என் நமஸ்காரங்கள். எப்போதும் பூர்ண ஆனந்தத்தை கொண்டிருப்பவனே. அனைவருக்கும் பற்பல சுகங்களை கொண்டவனே. அனைத்திலும் உனக்கு தேவையான ஸ்வாக்யரஸத்தை மட்டும் ஏற்றுக் கொள்பவனே. 

908. ஸ்ரீ ஸ்வஸ்தி 3க்ஷிணாய நம:

ஸுக2வர்த்34 வாக்யவுள்ளஸ்வஸ்தித3க்ஷிணா நமோ

ஸுக2ஸ்வரூபிணி ஸ்ரீத3க்ஷிணாதே3விய ரமண

ஸ்ரீகரனெ ஸ்ரீயதனே நின்ன ஸ்துதிஸுவ வேத3

வாக்ய உச்சாரண ஶ்ரவண ஸுக2வ்ருத்3தி3 மாள்புது3 

சுகத்தை கொடுப்பதான வாக்கினைக் கொண்டவனான ஸ்வஸ்திதக்‌ஷிணனே உனக்கு என் நமஸ்காரங்கள். சுக ஸ்வரூபனே. ஸ்ரீதக்‌ஷிணா தேவியின் ரமணனே. ஸ்ரீகரனே. ஸ்ரீயதனே. உன்னை துதிக்கும் வேத வாக்கியத்தை உச்சாரணம் செய்வதால், ஸ்ரவணம் செய்வதால், சுகவ்ருத்திகள் பெருகுகின்றன. 

909. ஸ்ரீ அரௌத்3ராய நம:

காமக்3ரோதா3தி33ளு நினகி3ல்லஅரௌத்3 நமோ

ரமாரமண நீ ஸதா3 ஆப்தகாம அனபேக்

ஆமயவிகாராதி3 ரஹித பூர்ணைஶ்வர்யரூப

ஸுமங்க3 அப்ராக்ருத ஸுக2ஞான 3லபூர்ண 

உனக்கு காம, க்ரோதாதிகள் இல்லை. அரௌத்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். ரமாரமணனே. நீ எப்போதும் ஆப்தகாமன். எதையும் விரும்பாதவன். எவ்வித விகாரங்களும் இல்லாதவன். முழுமையான ஐஸ்வர்ய ரூபனே. மங்களனே. அப்ராக்ருத ஸுக ஞானனே. பலபூர்ணனே. 

***


No comments:

Post a Comment