Wednesday, November 22, 2023

#311 - 919-920-921 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

919. ஸ்ரீ பேஶலாய நம:

ப்ரஶ்னக்கெ விஷய நீபேஶல நமோ நமோ நினகெ3

ஸ்ரீ ஸௌந்த3ர்யஸார ஸுமனோஹர க்4ருணி ஸ்வாமி

ஸம்ஶய தொலகி3 ஸம்யுக்3 யதா2ர்த்த2ஞான ஸித்3தி4கா3கி3

ப்ரஶ்னோத்தரவாத3 ஜிக்3ஞாஸ மாள்பனு முமுக்ஷு 

கேள்விக்கான பதில் நீயே. பேஷலனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீஷனே. ஸௌந்தர்யஸாரனே. ஸுமனோஹரனே. ஒளிர்பவனே. ஸ்வாமியே. சந்தேகங்களை விலக்கி, உண்மையான யதார்த்த ஞானத்திற்காக கேள்வி பதில் வடிவிலான ஆராய்ச்சி (படிப்பினை) செய்பவனே முமுக்‌ஷு ஆகிறான். 

920. ஸ்ரீ 3க்ஷாய நம:

அபி4வ்ருத்3தி4காரியு3க் நமோ நமோ நினகெ3

ஸத்ப4க்தர 3ளி பே33னே 3ந்து3 நீ ஞானஸுக2

ஸௌபா4க்3 ஆரோக்3 ஆயுஷ்ய பரமப4க்தி

க்ஷிப்ரத3லி வர்த்தி4ஸுவி விக்4னகர தை3த்யஹந்தா 

வளர்ச்சியை கொடுப்பவனே. தக்‌ஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸத்பக்தர்களிடம் வேகமாக வந்து, நீ ஞான சுக ஸௌபாக்ய ஆரோக்ய ஆயுஷ்ய பரமபக்தி ஆகியவற்றை விரைவாக அருள்வாய். தடை செய்யும் தைத்யர்களை நீ அழிக்கிறாய். 

921. ஸ்ரீ 3க்ஷிணாய நம:

ஸமுத்3ரதரணார்த்த2 3லவ்ருத்3தி3 மாள்பி3க்ஷிணா

நமோ எம்பெ3 ஹனுமப்ரியதம ஸ்ரீராமசந்த்3

ஸாமர்த்2 கௌஶல்ய ஔதா3ர்யபூர்ணனு ஸதா3 நீனு

ஸ்வாமி நீ ஶரணபாலக ஸுலப4னு ஸரள 

பாற்கடலை கடைந்து பலன்களை அருள்பவனே. தக்‌ஷிணனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஹனுமனின் ப்ரியனே. ஸ்ரீராமசந்த்ரனே. ஸாமர்த்ய, கௌஷல்ய, ஔதார்ய பூர்ணனே. எப்போதும் நீயே ஸ்வாமி. உன்னை வணங்குபவர்களை காப்பவனே. சுலபனே. ஸரளனே. 

***


No comments:

Post a Comment