ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
940. ஸ்ரீ க3பீ4ராத்மனே நம:
ஸ்தோமாதி3 க3ம்பீ4ரவேத3க3ளிகெ3 நீ ஆதா4ரனு
ஸ்வாமி நின்ன ஆனந்த3 கா3ம்பீ3ர்ய கு3ணக்கெது3ரில்ல
ஸ்தோமாதி3ஸ்துத்யனு ‘க3பீ4ராத்மா’ நமோ நமோ எம்பெ3
க4ன மளெ ப4யாபஹா கோ3வர்த்த4ன கி3ரிதா4ரி
வேதங்கள் அனைத்திற்கும் நீயே ஆதாரன். ஸ்வாமியே, உன்னுடைய காம்பீர்ய குனங்களுக்கு சமம் என்று யாரும் இல்லை. வேதங்களால் போற்றப்படுபவனே. கபீராத்மா உனக்கு என் நமஸ்காரங்கள். கடும் மழையின் பயத்தினை போக்கியவனே. கோவர்த்தன கிரிதாரியே.
941. ஸ்ரீ விதி4ஶாய நம:
விஶேஷேண உபதே3ஶ மாடு3வி ‘விதி4ஶனே’ நமோ
ஸ்ரீஶ வ்யாஸ நீ பை2ல வைஶம்பாயன ஸூர்ய ஜைமி
நி ஸுமந்து நாரத3 ஸுதஸ்த2 காமதே3வ ப்4ருகு3
ஸுஶீல ஶுக்ராத்3யர்கெ3 ஶ்ரேஷ்டதி3 உபதே3ஶிஸிதி3
விஸேஷமாக உபதேசம் செய்பவனே. விதிஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. வ்யாஸனே. நீ, பைல, வைஷம்பாயன, ஸூர்ய, ஜைமினி, ஸுமந்து, நாரத, ஸுதஸ்த, காமதேவ,ப்ருகு, ஸுஷீல, சுக்ர ஆகிய அனைவருக்கும் மிகவும் சிறந்ததாக உபதேசம் செய்தாய்.
942. ஸ்ரீ வ்யாதி3ஶாய நம:
ப3ஹுரக்ஷண போஷணக்ருத் ஸாமர்த்2யவந்ததா3தா நீ
அஹர்னிஶி ‘வ்யாதி3ஶனே’ நமோ எம்பெ3 மாம்பாலயா
பி3ரம்மஶிவ ஶக்ரார்க்க ஸோமாதி3 ஸர்வ அனிமிஷ
மஹாஸமுதா3யவு நின்ன ஆஞ்ஞாதா4ரகரு
அனைவரையும் ரக்ஷிப்பவனே. போஷிப்பவனே. அத்தகைய சாமர்த்தியம் கொண்டவனே. நீ எப்போதும் வ்யாதிஷனே விதிஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். என்னை காக்க வேண்டும். பிரம்ம, சிவ, இந்த்ர, சூர்ய, சந்த்ர முதலான அனைத்து தேவதா சமூகமும் உன் ஆணைப்படியே நடக்கிறார்கள்.
***
No comments:
Post a Comment