ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
928. ஸ்ரீ புண்யாய நம:
அண்ட3 கபாலவ சே2தி3ஸிதி3 ஆக3 ப3ந்த3 உத3க
புண்ட3ரீகாக்ஷ ஹிடி3து3 நின்னய பாத3 தொ1ளெயெ
அண்ட3பாவன புண்ய நதி3 தே3வதுல்யா க3ங்கா3
படெ3தி3 புண்யதா3 ‘புண்ய’ நமோ பி3ரம்ம ம்ருட3வந்த்3ய
பிரம்மாண்டத்தின் ஓட்டினை உடைத்தாய். அப்போது அங்கிருந்து வந்த தண்ணீரினை, பிரம்மன் பிடித்து உன் கால்களை கழுவ, உலகத்தையே புண்ணியம் ஆக்கும், புண்ணிய நதியான, தேவ நதிக்கு சமானமான கங்கையை பெற்றாய். புண்யாயனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்ம ருத்ர வந்த்யனே.
929. ஸ்ரீ து3:ஸ்வப்ன நாஶனாய நம:
மித்2யாஞானவன்னு விபரீதஞானவன்னு நாஷ
கெ3ய்து3 முக்தியோக்3ய ப4க்தரன்ன பாலிஸுவி மனோ
க3 து3ஷ்க்ருதி களெது3 ‘து3:ஸ்வப்ன நாஶன’ நமஸ்தே3
மதிகே2த3 களவர களெதி3 ஶிவ வாயுஸ்த2
மித்யா மற்றும் விபரீத ஞானத்தை அழித்து, முக்தியோக்யரான பக்தர்களை காக்கிறாய். மனதில் வரும் கெட்ட எண்ணங்களை அழித்து, கெட்ட கனவுகளை அழிக்கிறாய். ஸ்வப்ன நாஷனனே உனக்கு என் நமஸ்காரங்கள். புத்தியை கெடுக்கும் சிந்தனைகளை விலக்குகிறாய். ருத்ர, வாய்வந்தர்கதனே.
930. ஸ்ரீ வீரக்4னே நம:
நதி3 ப்ரதிப3ந்த4கவ களெவ ‘வீரஹா’ நமோ
நிர்தோ3ஷ ஸுபூர்ண நின்ன மஹாத்மா ஞானயுக்3 ப்ரேம
நதி3யந்தே என்னொள் ப்ரவஹிஸி ப்ரதிப3ந்த4க
நீ தூ3ரமாடி3 நிரந்தர ப4க்திதா4ரா வர்த்3தி4ஸு
நதிக்கு வந்த தடைகளை விலக்குபவனே. வீரக்னனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நிர்தோஷனே. ஸுபூர்ணனே. உன் மகிமையானது, ஞானத்துடனான அன்பு, ஒரு நதியைப் போல எனக்குள் ப்ரவாகம் செய்து, என்னில் இருக்கும் தடைகளை நீ விலக்கி, நிரந்தரமாக என்னுள் பக்தி வருமாறு அருள்வாயாக.
***
No comments:
Post a Comment