ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
901. ஸ்ரீ கபிலாய நம:
ப4க்தரிகெ3 க3வாதி3க3ள கொடு3வவ ஜக3த்
கர்த ப்ரவர்தக ஜ்யோதிர்மய தே3வஹூதி ஸ்துத்ய
‘கபிலாய நம: வந்தே3 விஷ்ணும் கபிலம்
வேத3க3ர்ப்ப4ம் கஷ்டாசௌ பிஸ்சாஸௌ லஸ்ச’
பக்தர்களுக்கு பசு முதலான செல்வங்களை அளிப்பவனே. ஜகத் கர்தனே. ப்ரவர்த்தகனே. ஜ்யோதிர்மயனே. தேவஹூதியினால் ‘கபிலாய நம: வந்தே’ என்று துவங்கும் ஸ்தோத்திரத்தால் போற்றப்பட்டவனே.
902. ஸ்ரீ கபயே நம:
ஸுகா2னுப4வ உள்ள ‘கபி’ நமோ நமோ நினகெ3
‘கம் ஸுக2ம் பிப3தி’ ஸுகா2னுப4வி கபி நாமனு
ஸுக2மய நீனேவெ எந்து3 ஸ்ருதி புன: புன:வு
ஹொக3ளுத்தெ ‘ஆனந்த3மயோ அப்4யாஸாத்’ பி3ரம்மஸூத்ர
சுகானுபவம் கொண்ட கபயே உனக்கு என் நமஸ்காரங்கள். சுகானுபவம் கொண்ட கபியே, நீயே சுகமயன் என்று ஸ்ருதி உன்னை திரும்பத்திரும்ப புகழ்கிறது. பிரம்மஸூத்ரமும் ஆனந்த மயோப்யாஸாத் என்று உன்னை சொல்கிறது.
903. ஸ்ரீ அவ்யயாய நம:
ஸ்வர்க்3கா3தி3க3ள கொடு3வவ நீ ‘அவ்யயனே’ நமோ
ஸுக2வன்னு ப4க்தஜனரிகெ3 ஒத3கி3ஸுவி நீ
ப4க்த ரக்ஷணக்காகி3 ப4க்தரப3ளி போகு3வியோ
ஸ்ரீகாந்த அவ்யய ஸுபூர்ண நிர்தோ3ஷ கு3ணஸிந்து4
ஸ்வர்க்காதிகளை கொடுப்பவனே. அவ்யயனே. (அழிவில்லாதவனே) உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களுக்கு சுகத்தை அருள்கிறாய். பக்த ரக்ஷணைக்காக பக்தர்களிடம் செல்பவனே. ஸ்ரீகாந்தனே. அவ்யயனே. பூர்ணனே. நிர்தோஷனே. குணங்களின் கடலே.
***
No comments:
Post a Comment