Sunday, November 26, 2023

#315 - 931-932-933 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

931. ஸ்ரீ ரக்ஷணாய நம:

ஸுகா2தி33ளன்ன இத்து ரக்ஷணமாள்பரக்ஷணா

ஸுக2மய நமோ நினகெ3 ஏகாத்மா ஸ்ரீய:பதே

4க்தஷரணாக3 ரக்ஷாமணி நீ உத்தரா

3ந்து3 மொரெயிடெ3 ரக்ஷிஸிதி3 3ர்ப்ப3 ஸ்ரீ கிருஷ்ண 

சுகங்களை அருளி அனைவரையும் காக்கும் ரக்‌ஷணனே உனக்கு என் நமஸ்காரங்கள். சுகமயனே. ஏகாத்மனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. சரணாகதி அடையும் பக்தர்களை காப்பவனே. உத்தரா வந்து உன்னிடம் முறையிட, நீ அவளது கர்ப்பத்தை காத்தாயே. ஸ்ரீஷனே. கிருஷ்ணனே. 

932. ஸ்ரீ ஸந்தா1 நம:

ஸுக2ஞானப3 ஸாத3 ஸம்பத் மொத3லாத3

நீ கருணிஸி 4க்தரிகெ3 விஸ்தார மாடு3வியோ

ஸ்ரீகர நாராயணஸந்த நமோ நினகெ3 ஸதா3

ஹொக3ளுதிதெ3 ஸ்ருதிஸ்ம்ருதி நின்ன ஔதா3ர்யவ 

சுக, ஞான, பல, ஸாதன, செல்வம் ஆகியவற்றை நீ அருளி, பக்தர்களை காப்பவனே. ஸ்ரீகர நாராயணனே. ஸந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ருதி, ஸ்ம்ருதிகள் உன்னை எப்போதும் புகழ்கின்றன. உன்னுடைய கருணையை அவை புகழ்கின்றன. 

933. ஸ்ரீ ஜீவனாய நம:

ஜக3த்திகெ3 ஜீவனப்ரத3 நீனுஜீவன நமோ

ப்ரக்ருஷ்ட சேஷ்டா ஸுக2தா3 ஸுக23 பூர்ணப்ராணா

உக்த சாந்தோக்3யதி3 உத்3தா3லக ஶ்வேதகேது ஸம்வாத3

த்3ருஷ்டாந்தக3ளு வ்ருக்ஷஜீவ ந்யக்3ரோத3 2லதா3 

உலகிற்கு ஜீவனத்தை அருள்பவனே. ஜீவனனே உனக்கு என் நமஸ்காரங்கள். மிகச்சிறந்த செயல்களை செய்பவனே. சுகத்தை அருள்பவனே. பூர்ணப்ராணனே. சாந்தோக்ய உபநிஷத்தில், உத்தாலக ஸ்வேதகேதுவின் சம்பாஷணகளே இதற்கு சரியான உதாரணங்கள் ஆகும். மரங்களில் ஜீவனாக இருப்பவனே. அத்தி மரத்தின் பலன்களை தருபவனே. 

***


No comments:

Post a Comment