Saturday, November 4, 2023

#304 - 897-898-899-900 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

897. ஸ்ரீ ஸதா3மர்ஷிணே நம:

ஸதா3மர்ஷ நீனு ப்ரஜ ஸம்மர்த3ஸஹன மாள்பி

ஸதா3 நமோ எம்பெ3 நினகெ3 நந்த3கந்த3 கோ3பால

உத3மானி வருணன ஆலயகெ போகி3 கிருஷ்ண

நந்த3கோ3பன்ன தானு கரது3தந்த3 ஸ்வபுரகெ 

ஸதாமர்ஷனே. நீ மக்கள் சொல்லும் ஸ்தோத்திரங்களை ஏற்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். நந்தகந்த கோபாலனே. வருணனின் ஆலயத்திற்கு சென்றிருந்த நந்தகோபனை, ஸ்ரீகிருஷ்ணன் சென்று தன் இடத்திற்கு மறுபடி அழைத்து வந்தானே. 

898. ஸ்ரீ லோகாதி3ஷ்டானாய நம:

லோகக்கெ முக்2யாஶ்ரயனுலோகாதி4ஷ்டான நமோ

ஜக3த்ஸர்வ நின்ன ஶ்ரய ஆதா4ரத3ல்லிஹுது3

ஜக3த்ஸர்வ ரத2னாபௌ4 அர இவ வாயுனல்லி

ப்ரதிஷ்டி2தவு வாயு நின்னல்லி ப்ரதிஷ்டி2தனு 

உலகத்திற்கு முக்கிய ஆஸ்ரயனே. லோகாதிஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். உலகம் முழுவதுமே உன்னுடைய ஆஸ்ரயம் ஆகும். உலகில் உள்ள அனைத்து வஸ்துகளும், வாயுவில் அடங்கியிருக்க, அந்த வாயு உன்னில் அடங்கியிருக்கிறான். 

899. ஸ்ரீ அத்3பு4தாய நம:

அன்னாதி33 உத்பாத3அத்3பு4 நமோ எம்பெ3

ப்ராணிக3 ஜீவனப்ரத3 ஶ்ரய ஸ்வரூபனு

ப்ராணிக3 தே3ஹோபசய ஸாத4 யோக்3யரிகெ3

ஞானஸுக2மொத3லாத3 ப்ராபக மஹாதே3 

அன்னாதிகளை உற்பத்தி செய்பவனே, அத்புதனே உனக்கு என் நமஸ்காரங்கள். ப்ராணிகளுக்கு ஜீவனத்தை அருள்பவனே. அனைத்திற்கும் ஆஸ்ரய ஸ்வரூபனே. ப்ராணிகளின் தேகத்தில் நிலைத்திருப்பவனே. ஸாதன யோக்யர்களுக்கு ஞான, ஸுக ஆகிய அனைத்தையும் அருள்பவனே. மஹாதேவனே. 

900. ஸ்ரீ ஸனாத் ஸனாதனதமாய நம:

ஆம்னாய ஸாsர்த்த2 திளித3 அனுப4 ஞானவந்த

ஏனு எந்தா2த்3து3 விகாரவில்லத3 ஶாஶ்வதனு

ஸனாத் ஸனாதனதம நமோ எம்பெ3 நாராயண

நித்யோs நித்யானாம் ஸ்ருதி உக்த நமோ ஸர்வோத்தம 

வேதங்களால் போற்றப்படுபவனே. ஞானவந்தனே. எப்படிப்பட்ட விகாரமும் இல்லாத நிரந்தரனே. ஸனாத் ஸனாதனதமனே உனக்கு என் நமஸ்காரங்கள். நாராயணனே. நித்யோsநித்யானாம் என்று ஸ்ருதி உன்னை புகழ்கிறது. ஸர்வோத்தமனே. 

***



No comments:

Post a Comment