Friday, November 17, 2023

#306 - 904-905-906 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

904. ஸ்ரீ ஸ்வஸ்திதா3 நம:

ஸுக2ப்ரத3ஸ்வஸ்தித3நமோ நமோ நமோ நினகெ3

மங்க3ளப்ரத3 ரமாஸமேத ஶோப4 ஸ்வரூப

லோகத3லி ஸுக2ஜனக ஸதிஸுத ப்ரேமவ

நிஷ்டத4 ஸுக2 நீ கொடு3வி நித்யஸுக2மோக் 

சுகத்தை அருள்பவனே. ஸ்வஸ்திதனே உனக்கு என் நமஸ்காரங்கள். மங்களப்ரதனே. ரமா ஸமேத மங்கள ஸ்வரூபனே. உலகத்தில் சுக, பெற்றோர், மனைவி, மக்கள், அன்பு, செல்வம் என அனைத்தையும் நீ கொடுக்கிறாய். நித்ய சுகமான மோட்சத்தையும் அருள்பவனே. 

905. ஸ்ரீ ஸ்வஸ்தி க்ருதே நம:

ஸுக2கர்தா ஸ்வஸ்திக்ருத் நமோ நமோ நினகெ3

4க்தரிகெ3 சே23 கே23 பா3ரதெ3 தூ3ரமாடி3 நீ

ஸுக2மாடு3வி ஸர்வவிஷயத3லு 4க்த நின்ன

ஹ்ருத்கீ1லாலஜத3ல்லி ஸ்மரிபனு 4க்திஞானதி3ம் 

சுககர்தனே. ஸ்வஸ்தி க்ருதே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களுக்கு எவ்வித துன்பங்களும் வராமல், அவற்றை விலக்கி நீ சுகத்தை அருள்கிறாய். அனைத்து விஷயங்களிலும் இவ்வாறு அருள்பவனே. பக்தனானவன் உன்னை தன் இதயகுகையில் வைத்து, பக்தி ஞானத்தினால் நினைக்கிறான். 

906. ஸ்ரீ ஸ்வஸ்தினே நம:

4க்தர ப்ரஸித்34 மாடி3 இட்டிருவி 4க்தஸ்த2 நீ

ஸ்வஸ்தி நமோ ஸௌக்ய மங்க3ளப்ரதா3 லக்ஷ்மீ

ஸ்வதந்த்ர ஸத்தாவான் பூர்ண ஸுக2ஸ்வரூபனு நீனு

ஸதா3 ஸகல தே3ஶகாலதி3 வர்ஶிஸுவி ஸ்ரீ 

பக்தர்களை புகழ் பெற்றவர்களாக ஆக்குபவனே. பக்தர்களில் இருப்பவனே. நீயே ஸ்வஸ்தி. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸௌக்ய, மங்களங்களை அருள்பவனே. லட்சுமிதேவியின் தலைவனே. ஸ்வதந்த்ர, நலன்களை கொண்டவனே. பூர்ண சுக ஸ்வரூபனே. அனைத்து தேசகாலங்களிலும் எப்போதும் இருப்பவனே. லட்சுமிதேவியின் தலைவனே. 

***

No comments:

Post a Comment