Friday, November 24, 2023

#313 - 925-926-927 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

925. ஸ்ரீ புண்யஶ்ரவண கீர்த்தனாய நம:

புண்யஶ்ரவணகர்ம ப்ரகடன மாடி3ஸுவவ

புண்யஶ்ரவண கீர்த்தன நமோ நமோ எம்பெ3 ஸ்வாமி

நின்னய கு3ணக்ரியாவர்ணன ஶ்ரவணமாள்ப

புண்யவந்தர பா4க்3யக்கெ எணெயுண்டெ உத்தமஸ்லோக 

புண்ய ஸ்ரவண கர்மங்களை உன் பக்தர்கள் மூலம் செய்விப்பவனே. புண்யஸ்ரவண கீர்த்தனனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய குண, க்ரியா, வர்ணனைகளை கேட்கும் புண்யவந்தர்களுக்கு கிடைக்கும் பாக்கியத்திற்கு இணை உண்டா? (இல்லை). உத்தம ஸ்லோகனே. 

926. ஸ்ரீ உத்தாரணாய நம:

ஸமுத்3ரதாரக நீனுஉத்தாரண நமோ எம்பெ3

மஹா ஸம்ஸாரப்3தி4 தா3டிஸுவி ஸ்ரீமுகுந்த3

ஒம்மொம்மெ 3ப்ப உபடள ஸுளிய தா4டிஸுவி

ப்ரேமி 4க்தவத்ஸல க்ருபாளோ ஶரணு ஶரணு 

கடலை காப்பவன் நீயே (ராமாவதாரத்தில்). உத்தாரணனே உனக்கு என் நமஸ்காரங்கள். இந்த மஹா சம்சார என்னும் கடலை, என்னை தாண்டச் செய்வாய். ஸ்ரீமுகுந்தனே. அவ்வப்போது வரும் பிரச்னைகளின் சுழிகளிலிருந்து என்னை தாண்டச் செய்வாய். ப்ரேமியே. பக்தவத்ஸலனே. கருணைக்கடலே. உன்னை வணங்குகிறேன். 

927. ஸ்ரீ து3ஷ்க்ருதிக்4னே நம:

து3ஷ்கர்ம நாஶமாடு3து3ஷ்க்ருதிஹா நமோ எம்பெ3

து3ஷ்க்ருதி பாபி தை3த்யர நீ ஸம்ஹார மாடு3வியோ

உத்க்ருஷ்ட தி3னத்ரயாசரிஸித3 அம்ப3ரீஷன்ன

ரக்ஷிஸிதி3 ரிஷிக்ருத து3ஷ்க்ருதிய த்4வம்ஸிஸிதி3 

துஷ்கர்மங்களை அழிக்கும் துஷ்க்ருதிக்னனே உனக்கு என் நமஸ்காரங்கள். கெட்ட செயல்களை செய்யும் பாவி தைத்யர்களை நீ அழிக்கிறாய். மிகச் சிறந்ததான தினத்ரய விரதத்தை பின்பற்றிய அம்பரீஷனை நீ காத்தாய். ரிஷிகள் செய்யும் கெட்ட செயல்களை நீ அழித்தாய்.


***


No comments:

Post a Comment