Thursday, March 23, 2023

#125 - 363-364-365 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 363. ஸ்ரீ ஶரபா4 நம:

ஸோமரஸபு4க்ஞ நீனுஶரப4னேநமோ நினகெ3

ரமா ப்ரளயார்ணவதி3 ஜல வடபத்ரரூப

மஹாஐவத்து கோடியோஜன விஸ்தீர்ணத3லி

ரமாயுக் நீனு ப்ரஜ்வலிஸுவி ஆதி3 நாராயண 

ஸோம ரஸத்தை குடிப்பவன் நீயே ரபனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரளய காலத்தில், ஸ்ரீரமாதேவி, ஜல மற்றும் வடபத்ர இலையில் ரூபத்தில் இருக்க, அந்த 50 கோடி யோஜனை பரப்பில் இருப்பதான கடலில் நீ ஸ்ரீரமாதேவியுடன் ஒளிர்கிறாய். ஆதி நாராயணனே. 

364. ஸ்ரீ பீ4மாய நம:

ஸர்வப்ராணிக3ளன்ன நியமனமாள்பபீ4மனே

ஸர்வதா3 நமோ ஸ்ரீ ஸ்ரீவேத3வ்யாஸ அவதார

ஸர்வதா3 4க்தஜன 4யனா மாள்பி ஶத்ருகெ3

ஸர்வதா3 4யக்ருத் ஶாஸ்த்ரோக்தி 4யக்ருத் 4 நாஷன 

அனைத்து பிராணிகளையும் நியமனம் செய்பவனே பீமனே. உனக்கு என் நமஸ்காரங்கள். லட்சுமிதேவியின் தலைவனே. ஸ்ரீவேதவ்யாஸ அவதாரனே. எப்போதும் பக்த ஜனர்களின் பயங்களை பரிகரிப்பாயாக. எதிரிகளுக்கு எப்போதும் பயத்தினை கொடுப்பவனே. சாஸ்திரங்கள் சொல்வதைப் போல, நீயே பயக்ருத் மற்றும் பய நாஷனனாக இருக்கிறாய். 

365. ஸ்ரீ ஸமயக்3ஞாய நம:

ஸாது4வஸ்து கொடு3வவஸமயக்3நமோ எம்பெ3

ஸாது4 4க்தாபி4ஷ்ட யாவாக3 கொடு3வவவெந்த3ரிவி

யதா2ர்த்த2 வஸ்துஸ்தி2தி இத்தா3கெ3 மா ஸஹ அரிவி

ஶதவருஷ ஆயுஷ்யஞான ஸாத4 கொடு3வி 

ஸாத்விக வஸ்துகளை கொடுப்பவனே ஸமயக்ஞனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களின் அபீஷ்டங்களை எப்போது கொடுக்க வேண்டும் என்பதை நீ அறிவாய். அவர்களின் யோக்யதைகளையும் நீ அறிவாய். அதற்கேற்ப 100 ஆண்டுகளின் ஸாதன ஆயுளை நீ கொடுக்கிறாய்.

***


Tuesday, March 21, 2023

#124 - 360-361-362 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 360. ஸ்ரீ மஹாக்ஷாய நம:

தா3ஶீலவாகி3ருவ மன மொத3லாதி3ந்த்3ரிய

4 உதா3ரனே நினகி3வெமஹாக்நமஸ்துப்4யம்

ஏனெம்பெ3 நின்ன 3யாபூர்ண மஹா அக்ஷணிய

நின்ன கருணாத்3ருஷ்டி என்னமேலிரலி ஸதத 

கருணை நிறைந்த மனம் முதலான நற்குணங்களைக் கொண்டவனே ‘மஹாக்‌ஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய கருனையை நான் என்னவென்று சொல்லட்டும்?. உன்னுடைய கருணைப்பார்வை மிகவும் வலிமை வாய்ந்தது, அது என் மேல் எப்போதும் இருக்கட்டும். 

361. ஸ்ரீ 3ருட3த்4வஜாய நம:

யுத்த33லி ஜயகோ4 ஸின்ஹத்4வனி மொத3லாத3

ப்3ருஹத்4வனி சின்ஹவுள்ள3ருட3த்4வஜநமஸ்துப்4யம்

எது3ர்யாரோ நில்லலிக்காக3ரோ வைனதேய த்4வஜ

ஸுதை4ர்ய 3ஶீல ஜயஜயது ஜயஜய 

போரினில் ஜயகோஷம், ஸிம்ஹ த்வனி ஆகிய மிகச்சிறந்த சின்னங்களைக் கொண்ட கருடத்வஜனே உனக்கு என் நமஸ்காரங்கள். உனக்கு எதிராக யார்தான் நிற்க முடியும்?. கருடத்வஜனே, அபாரமான தைரியம், பலங்களைக் கொண்டவனே; உனக்கு வெற்றி உண்டாகட்டும். 

362. ஸ்ரீ அதுலாய நம:

அஸத்3ருஶனாகி3ருவஅதுலநமோ நினகெ3

ஸ்ரீ நினகெ3 ஸமரில்ல முக்தாமுக்தரல்லி

பி3ஸஜாஸன ஶி3வாதி33ளு ஸர்வப்ராணிக3ளு

கேஶவாதீ4னரெந்து3 ப்ரஸித்34 ஸதா33மத3ல்லி

 

முதல்மையானவனாக இருக்கும் அதுலனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. உனக்கு சமம் என முக்த அமுக்த ஜீவர்களில் யாரும் இல்லை. பிரம்ம சிவாதிகள், ஸர்வ பிராணிகள் என அனைத்தும் கேசவனின் அதீனம் என்று ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது.

***

Monday, March 20, 2023

#123 - 354-355-356 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 354. ஸ்ரீ அரவிந்தா3க்ஷாய  நம:

த்3ரவ்யப்ராப்தி ஒத3கி3ஸுவி 43வான் புரோடா3

ஹவிஷ்ய ப்ரக்ஷேபக ஶ்ரயஅரவிந்தா3க்ஷனெ

ஸர்வதா3 நமோ எம்பெ3 அக்ஞான திமிர களெயோ

ரவீந்த3ந்த4காரக்4 அரவிந்தா3க் ஞானஜ்யோதி 

வேண்டிய திரவியங்களை பக்தர்களுக்கு அருள்பவனே. பகவானே. அரவிந்தாக்‌ஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். என் அஞ்ஞானத்தை களைவாயாக. பலமான அந்தகாரத்தினை அழிப்பவனே. ஞான ஜ்யோதி ஸ்வரூபம் கொண்டவனே. 

355. ஸ்ரீ பத்3மக3ர்பா4 நம:

ப்ராணிக3ளு ஸர்வரனு 3ர்ப4தொ3ளு இட்டுகொண்ட3

அனக4பத்3மக3ர்ப4னேநமோ எம்பெ3 பாலகனு

தனு பி3ரம்மபுரத3ல்லி வேஶ்ம ஹ்ருத்பத்3மாந்தஸ்த2னு

அன்னத்தேஶ்ருதி தஹரம் புண்ட3ரீகம் வேஶ்மஎந்து3 

பிராணிகள் அனைவரையும் உதரத்தில் வைத்துக் கொண்ட பத்மகர்ப்பனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரையும் காப்பவனே. அனைவரின் இதயத்தில் வசிப்பவன். உன்னை ஸ்ருதிகள் ‘புண்டரீகம் வேஶ் என்று புகழ்கின்றன. 

356. ஸ்ரீ ஶரீரப்4ருதே நம:

4க்தஜீவ கீர்த்திஸுவ ஸ்தோத்ர ஸ்வீகரிஸுவியோ

4க்தவத்ஸலஶரீரப்4ருத்நமோ எம்பெ3 நினகெ3

4க்தியிந்த3 4ஜிஸுவவரன்ன போஷிஸுவி நீ

ஸதத ஸம்ரக்ஷிஸுவி ஶரீரதா4ரகனாகி3 

பக்தர்கள் சொல்லும் ஸ்தோத்திரங்களை நீ ஏற்றுக் கொள்கிறாய். பக்தவத்ஸலனே. ரீரப்ருத் உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தியுடன் பஜிப்பவர்களை காக்கிறாய் நீ எப்போதும் அவர்களின் சரீரத்தில் இருந்து கொண்டு காக்கிறாய்.

***