ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
342. ஸ்ரீ புரந்த3ராய நம:
த4ராத்3யுக3ள ஒக்3க3ட்டு ஸம்ப3ந்த4க்கெ விஷயனு
‘புரந்த3ர’ நமோ த்4யாவாப்ருதி2வி ஆத3ரகாரி
மூரு அஸுரபுரக3ளன்னு நாஶமாடி3ஸிதி 3
து3ர்க்ரஹாதி3 ப4யாவரணக3ளன்ன நீகி3ஸுவி
ஜீவர்களின் சம்சார சம்பந்தத்திற்கு காரணனே, புரந்தரனே உனக்கு என் நமஸ்காரங்கள். மூன்று உலகங்களின் நலனுக்காக, மூன்று அசுர புரங்களை (த்ரிபுராஸுர) அழித்தவனே; துர்க்ரஹங்களால் வருவதான பயங்களை போக்குபவனே.
343. ஸ்ரீ அஶோகாய நம:
ஶோக ரஹிதனு நீனு ‘அஶோக’ நமோ நினகெ3
ஶோக மோஹாதி3க3ள விரோதி4 ஸுக2ஸ்தா2ன பூர்ண
ஶுக்ரனெந்து ஸ்ரீ விஷ்ணோ நினகெ3 ஹெஸரு ப்ரஸித்3த4
ஶுக்ரனெந்த3ரெ ஶோகரஹித எந்து3 உபநிஷத் உக்த
ஶோகங்கள் அற்றவன் நீ. அஶோகனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஶோக, மோகங்களின் எதிரியே; ஸுகஸ்தான பூர்ணனே; உனக்கு விஷ்ணு என்று பெயர். ஶோகரஹிதன் என்று உபநிஷத் உன்னை புகழ்கிறது.
344. ஸ்ரீ தா4ரணாய நம:
ஜனனமரணாதி3 ஸம்ஸாரதி3ந்த3 ஸஜ்ஜனர
க4ன த3யாபூர்ண நீ தாரிஸுவி ‘தா4ரண’ நமோ
இன மண்ட3லவர்த்தி ஸுக2ஞான ஜ்யோதிர்மய நீ
இனகுலதி3 ப்ராது3ர்ப4விஸிதி3 ராமசந்த்3ர
ஜனன, மரண என்னும் சம்சார சுழற்சியிலிருந்து ஸஜ்ஜனர்களை காப்பவன் நீ; தயாபூர்ணனே. அனைவரையும் நீ தரித்திருக்கிறாய். தாரணனே உனக்கு என் நமஸ்காரங்கள். சூரிய மண்டலத்தில் அந்தர்யாமியாக இருப்பவனே. ஸுகஞான ஸ்வரூபனே. ஜ்யோதிர்மயனே. சூரிய குலத்தில் நீ தோன்றினாய் ராமசந்திரனாக.
***
No comments:
Post a Comment