ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
339. ஸ்ரீ வாஸுதே3வாய நம:
ஆகாஶாதி3 த்3ரவ்யக3ளல்லி வ்யாபகனாகி3ருவி
ஸ்ரீகாந்த ‘வாஸுதே3வனே’ நமோ வஸுதே3வ புத்ர
ஏகாத்ம நீனு ஸர்வத3லி வாஸவாகி3ருவி
ஸுக்ரீடா3 லீலாதி3 சேஷ்டா விஶிஷ்டனு மாயாத4வ
ஆகாயம் முதலான அனைத்து இடங்களிலும் நீ பரவியிருக்கிறாய். ஸ்ரீகாந்தனே. வாஸுதேவனே. உனக்கு என் நமஸ்காரங்கள். வஸுதேவ புத்ரனே ஸ்ரீகிருஷ்ணனே. ஏகாத்மனே. நீ அனைத்திலும் வசிக்கிறாய். லீலையினாலேயே அனைத்து செயல்களை நீ செய்கிறாய்.
340. ஸ்ரீ ப்3ருஹத்பா4னவே நம:
ப்ராப்திஹேது ப்ரகாஶவாகி3ஹ உக்தமொத3லாத3
ஸ்தோத்ரவிஶேஷவந்த ‘ப்3ருஹத்பா4னு’ நமோ நினகெ3
நித்யதீப்தனு நீனு நினகெ3 ஸம தேஜஸ்ஸில்ல
ஆதி3த்யமண்ட3ல ஜ்யோதி நின்ன விபூ4தி ப்ரகாஶ
(பக்தர்களால்) அடையத் தக்கவன்; ஒளிமயமானவன்; ஸ்தோத்திரங்களால் போற்றப்படுபவன்; ‘ப்ருஹத்பானு’வே உனக்கு என் நமஸ்காரங்கள். எப்போதும் ஒளிர்பவன் நீயே. உனக்கு சமமான தேஜஸ் கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை. ஆதித்ய மண்டலத்தில் இருக்கும் ஜ்யோதியானது உன்னுடைய விபூதி ரூபத்தின் ஒளியே ஆகும்.
341. ஸ்ரீ ஆதி3தே3வாய நம:
உண்ணலிகெ யோக்3ய ஸோம ப்ராஸகனெ ‘ஆதி3தே3வ’
நினகெ3 நமோ எம்பெ3 ப4கவந்த க்ரீடா3விலாஸ
நீனேவெ ஸர்வக்கு காரணீபூ4தனாகி3ஹி தே3வ
நின்ன லீலாக்2ய க்ரீடெ3யு ஸர்வஸ்ருஷ்ட்யாதி3 க்ரியெயு
ஸாத்விகமான உணவினை ஏற்றுக் கொள்பவனே. ஆதிதேவனே உனக்கு என் நமஸ்காரங்கள். பகவந்தனே. உன் லீலைகளால் அனைத்து செயல்களையும் செய்பவனே. நீயே அனைத்திற்கும் காரணனாக இருக்கிறாய். ஸர்வ ஸ்ருஷ்டியாதி அனைத்து செயல்களும் உன் லீலைகளாலேயே நடக்கின்றன.
***
No comments:
Post a Comment