ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
333. ஸ்ரீ ப்ரதிஷ்டிதாய நம:
ப்ரதி புருஷரிகெ3 க3வாதி3க3ளன்னு கொடு3த்தலி
இப்பந்த ஸ்தி2திவுள்ள ‘ப்ரதிஷ்டித’ நமோ நினகெ3
இதர அனபேக்ஷ ஸ்வதந்த்ரனு எந்தி3கு3 எல்லு
ப்ரதிஷ்டித நீனு நின்னானந்த3 ப3லாதி3க3ளல்லி
அனைவருக்கும் பசு, செல்வம் ஆகியவற்றை கொடுப்பவனான
‘ப்ரதிஷ்டிதனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். என்றைக்கும், எங்கும் நீயே ஸ்வதந்த்ரன். ஆனந்தம், பலம் ஆகியவற்றில் நீயே
ஸர்வோத்தமன்.
334. ஸ்ரீ ஸ்கந்தா3ய நம:
ப4க்தரிகெ3 ஸ்ரேஷ்ட ஸுக2ப்ரத3 ‘ஸ்கந்த3’ நமோ எம்பெ3
ஸ்கந்த3னாத் ஸ்கந்த3 எந்து3 பூர்வாசார்யர வ்யாக்2யானவு
ப4க்தரிகெ3 ஸுக2வீவ நீனு ப4க்தஹிம்ஸாதை3த்யர
ஸ்கந்த3 எந்த3ரெ ஶோஷண மாடு3வியோ ப4க்தரக்ஷ
பக்தர்களுக்கு சிறந்ததான சுகத்தை தருபவனே ‘ஸ்கந்தனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். துஷ்டர்களை அழிப்பவன் ஆகையால் நீ ஸ்கந்தன் எனப்படுகிறாய். இதுவே பூர்வாசார்யரின்
வ்யாக்யானம் ஆகும். பக்தர்களுக்கு சுகத்தை கொடுப்பவன் நீ. பக்தர்களை இம்சிக்கும் தைத்யர்களின்
எதிரி என்றால், பக்தர்களை காப்பவன் என்று அர்த்தம். பக்த ரக்ஷகனே.
335. ஸ்ரீ ஸ்கந்தத4ராய நம:
ஶ்லாக்3யஸுக2 கொடு3வந்த விதீ4ஶாதி3 ஸுரர்க3ள
ரக்ஷகனு தா4ரகனு நீ ‘ஸ்கந்தத4ர’ நமஸ்தே
ஸ்கந்த3 அஹ்வய கார்த்திகே3யகா3தா3ரவாகி3ருவி
ஸ்கந்த3ன ஸௌந்த3ர்யக்கு நீனே ஆதா4ரவாகி3ருவி
தற்காலிக சுகங்களை கொடுக்கத்தக்க பிரம்மன் முதலான தேவர்களை
காப்பவன் நீயே. ஸ்கந்ததரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்கந்தன் எனப்படும் கார்த்திகேயனுக்கு
ஆதாரமாக இருக்கிறாய். ஸ்கந்தனின் அழகுக்கும் நீயே காரணமாக இருக்கிறாய்.
***
No comments:
Post a Comment