Thursday, March 23, 2023

#125 - 363-364-365 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 363. ஸ்ரீ ஶரபா4 நம:

ஸோமரஸபு4க்ஞ நீனுஶரப4னேநமோ நினகெ3

ரமா ப்ரளயார்ணவதி3 ஜல வடபத்ரரூப

மஹாஐவத்து கோடியோஜன விஸ்தீர்ணத3லி

ரமாயுக் நீனு ப்ரஜ்வலிஸுவி ஆதி3 நாராயண 

ஸோம ரஸத்தை குடிப்பவன் நீயே ரபனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரளய காலத்தில், ஸ்ரீரமாதேவி, ஜல மற்றும் வடபத்ர இலையில் ரூபத்தில் இருக்க, அந்த 50 கோடி யோஜனை பரப்பில் இருப்பதான கடலில் நீ ஸ்ரீரமாதேவியுடன் ஒளிர்கிறாய். ஆதி நாராயணனே. 

364. ஸ்ரீ பீ4மாய நம:

ஸர்வப்ராணிக3ளன்ன நியமனமாள்பபீ4மனே

ஸர்வதா3 நமோ ஸ்ரீ ஸ்ரீவேத3வ்யாஸ அவதார

ஸர்வதா3 4க்தஜன 4யனா மாள்பி ஶத்ருகெ3

ஸர்வதா3 4யக்ருத் ஶாஸ்த்ரோக்தி 4யக்ருத் 4 நாஷன 

அனைத்து பிராணிகளையும் நியமனம் செய்பவனே பீமனே. உனக்கு என் நமஸ்காரங்கள். லட்சுமிதேவியின் தலைவனே. ஸ்ரீவேதவ்யாஸ அவதாரனே. எப்போதும் பக்த ஜனர்களின் பயங்களை பரிகரிப்பாயாக. எதிரிகளுக்கு எப்போதும் பயத்தினை கொடுப்பவனே. சாஸ்திரங்கள் சொல்வதைப் போல, நீயே பயக்ருத் மற்றும் பய நாஷனனாக இருக்கிறாய். 

365. ஸ்ரீ ஸமயக்3ஞாய நம:

ஸாது4வஸ்து கொடு3வவஸமயக்3நமோ எம்பெ3

ஸாது4 4க்தாபி4ஷ்ட யாவாக3 கொடு3வவவெந்த3ரிவி

யதா2ர்த்த2 வஸ்துஸ்தி2தி இத்தா3கெ3 மா ஸஹ அரிவி

ஶதவருஷ ஆயுஷ்யஞான ஸாத4 கொடு3வி 

ஸாத்விக வஸ்துகளை கொடுப்பவனே ஸமயக்ஞனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களின் அபீஷ்டங்களை எப்போது கொடுக்க வேண்டும் என்பதை நீ அறிவாய். அவர்களின் யோக்யதைகளையும் நீ அறிவாய். அதற்கேற்ப 100 ஆண்டுகளின் ஸாதன ஆயுளை நீ கொடுக்கிறாய்.

***


No comments:

Post a Comment