ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
321. ஸ்ரீ க்ரோத4க்ருதே நம:
த்4யுப்ருது2வீ ஸ்தா2பக ‘க்ரோத4க்ருத்’ நமோ நமோ எம்பெ3
பாபிக3ளு ஸாது4தன இல்லத3வரிகெ3 க்ரோத4
ப்ராபகனாகு3வி ஸத்வக்ஷீண ரஜோன்னாஹ தமஸ்
ப்ரசுரமாடு3வி தத்வத் யோக்3யதா கர்ம அரிது
அந்தரிக்ஷம், பூமண்டலம் ஆகியவற்றை நிறுவியவனே. க்ரோதக்ருத்
- உனக்கு என் நமஸ்காரங்கள். பாவம் செய்பவர்கள், ஸாத்விகம் இல்லாதவர்கள் ஆகியோருக்கு
கோபத்தை உண்டாக்குபவனாக இருக்கிறாய். உன் பக்தர்களின் யோக்யதைகளை அறிந்து, அவர்களின்
ஸத்வத்தினை, ரஜஸ்ஸினை, தமஸ்ஸினை அதிகமோ / குறைக்கவோ செய்கிறாய்.
322. ஸ்ரீ கர்த்ரே நம:
லோகஜனரன்ன பாலனாதி3க3ளன்ன மாள்பெ
முக்2யகாரண நீனு ‘கர்தா’ நமோ எம்பெ3 நினகெ3
முக்2யகர்த எந்தரெ ஸ்வதந்த்ரனெந்து3 திளிவுது3
கர்த்ருத்வ லக்ஷண ஸ்வதந்த்ரத்3து3 அஸ்வதந்த்ரத்தல்ல
உலக மக்களின் காத்தல் ஆகியவற்றை செய்கிறாய். இதற்கு
நீயே முக்கிய காரணன். கர்தனே உனக்கு நமஸ்காரங்கள். முக்யகர்தன் என்றால் ஸ்வதந்த்ரன்
என்று அறிய வேண்டும். கர்த்ருத்வ லட்சணம் என்பது ஸ்வதந்த்ரனிடம் மட்டுமே உள்ளது; அஸ்வதந்த்ரரிடம்
இல்லை.
323. ஸ்ரீ விஶ்வபா3ஹவே நம:
ஸர்வத்ர ஸர்வரலி க்ரியா ப்ரகடிஸுவவ நீ
ஸர்வகர்தா ‘விஶ்வபா3ஹுவே’ ஸதா நமோ நினகெ3
யாவ முக்2யப்ராணனு க்ரியாரூபதி3 ப்ரகட
ஆ வாயுதே3வரிகெ3 காரணனு நீ விஶ்வபா3ஹு
அனைவரிடமும், அனைத்து இடங்களிலும் நின்று செயல்களை
செய்விப்பவன் நீயே. நீயே ஸர்வகர்தா. ‘விஶ்வபாஹுவே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். எந்த முக்யபிராணன் தன் செயல்களை ஜீவர்களில் இருந்து செய்விக்கிறானோ,
அந்த வாயுதேவருக்கே நீ காரணன் ஆகிறாய். நீயே விஶ்வபாஹு.
***
No comments:
Post a Comment