ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
327. ஸ்ரீ ப்ராணாய நம:
ப்ரக்ருஷ்ட வஜ்ராதி3க3ள ப்ரஹரண மாள்ப ‘ப்ராண’
பா3கி3 ஶிர நமோ எம்பெ3 உத்க்ருஷ்ட ப3லசேஷ்டவான்
ப்ரக்ருஷ்ட ப்3ருஹதி ஸஹஸ்ர ஸ்வர வ்யஞ்சனாக்ஷர
வாச்யனே ஸூர்யனு ஶதாப்3த க்ரியாமாடி3ஸுவி
உன்னுடைய சிறந்த வஜ்ராயுதங்களால் அடிக்கும் ‘ப்ராணனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். மிகச்சிறந்த செயல்களை செய்பவனே. ப்ருஹதி ஸஹஸ்ர நாமங்களால் அழைக்கப்படுபவனே.
ஸ்வரங்களால், எழுத்துக்களால் அழைக்கப்படுபவனே. சூரியனுக்கு ஒளி கொடுத்து, அவனின் செயல்களை
செய்ய வைப்பவனே.
328. ஸ்ரீ ப்ராணதா3ய நம:
உத3ர கொடு3வவ நீ ‘ப்ராணத3’ நமோ நினகெ3
நீ த3யதி3 ப்ராணகொடு3வி ஆத்3த3ரிம் ப்ராணத3னு
மோத3மய நீ ஸூர்யனொளித்3து3 ஶதாயஷ்ய வீவி
உத3காக்2ய ப4க்தி ப்ரவர்த்திஸுவி ப்ரதிக்ஷண ஸ்வாமி
வயிறு (இந்த தேகத்தினை) கொடுப்பவனே ‘ப்ராணதனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். நீயே கருணையுடன் பிராணனைக் கொடுக்கிறாய். ஆகையால் ‘ப்ராணதன்’ என்று அழைக்கப்படுகிறாய்.
ஆனந்தமயமானவனே. நீ சூரியனில் இருந்து ஒளியைக் கொடுக்கிறாய். அனைவரிலும் பக்தியை வளர்ப்பவனே.
உனக்கு என் ப்ரதட்சிண நமஸ்காரங்கள், ஸ்வாமியே.
329. ஸ்ரீ வாஸவானுஜாய நம:
ஸோசிதானுஷ்டான ஸ்தி2தி நாஶகெ3ய்வ அஸுரர
நாஶமாடு3வ ‘வாஸவானுஜ’ நமோ நமோ எம்பெ3
வாஸவானுஜ வாமன யக்ஞ நரஸிம்ஹ ராம
வ்யாஸபா4ர்க்க3வ கிருஷ்ண கல்க்யாதி3 ரூப து3ஷ்டஹந்தா
முனிவர்களின் யக்ஞங்களை / செயல்களை அழிக்கும் அசுரர்களை
அழிக்கும் ‘வாஸவானுஜனே’
உனக்கு என் நமஸ்காரங்கள். வாமனே. யக்ஞனெ. நாரஸிம்ஹனே. ராமனே. வ்யாஸரே.
பார்க்கவனே. கிருஷ்ண கல்கி முதலான அவதாரங்களை துஷ்டர்களை அழிப்பதற்காகவே நீ வந்திருக்கிறாய்.
***
No comments:
Post a Comment