ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
336. ஸ்ரீ து3ர்யாய நம:
பி3ட3தெ3 ஸர்வதே3வ அக்ர3தி3 இஹ ‘து3ர்ய’ நமோ
ஒடெ3ய நின்ன ஹிந்தெ3 ஸர்வரு ஸர்வராதா4ர நீனு
பாண்ட3வர்க3ள யோக3க்ஷேம வஹிஸி ஸாரத்2யவ
மாடி3 ஜய ஒத3கி3ஸிதி3 முந்தெ3 நீனு குளிது
அனைத்து தேவர்களுக்கு உள்ளும் இருப்பவனே ‘துர்யனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். தலைவனே. உன் பின்னாலேயே அனைவரும் இருக்கிறார்கள். அனைவருக்கும் ஆதாரமானவன்
நீயே. பாண்டவர்களின் நலனுக்காக நீ அவர்களுக்கு சாரதியாக இருந்து, போரில் வெற்றியை பெற்றுக்
கொடுத்தாய்.
337. ஸ்ரீ வரதா3ய நம:
உத்தம ஜ்யோதிப்ரத3 ‘வரத3னே’ நமோ நினகெ3
ப4க்தவர்யரிகெ3 நின்னிச்செயிம் அபரோக்ஷஞான
யுக்தகாலதி3 ஸஸ்வரூபானந்த3விர்பா4வ யன்னு
வந்த மோக்ஷ ஸுக்ஞானாதி3 வரத3 ஸர்வோத்தம
உத்தம ஞான ப்ரதனே. வரதனே உனக்கு என் நமஸ்காரங்கள்.
பக்தர்களுக்கு உன் இஷ்டப்படி அபரோக்ஷ ஞானத்தை அவர்களின் தக்க காலத்தில் கொடுப்பவனே.
ஸ்வரூபானந்தத்தினை, மோட்ச சுக்ஞானத்தினை அளிப்பவனே. ஸர்வோத்தமனே.
338. ஸ்ரீ வாயுவாஹனாய நம:
கு3ருக3ளொளிப்ப வாயுதே3வரிந்த3 உபதே3ஶ
அருஹுவ ஞானாதி3 கு3ணவான் ‘வாயுவாஹனனே’
ஶிரபா3கி3 நமோ எம்பெ3 ஶ்வாஸவாயுவாஹனனே
ஸ்ரீரமாயுக் நீனு வாயு அதிஷ்டானத3ல்லி த்4யேய
குருகளின் அந்தர்யாமியாக இருக்கும் வாயுதேவரில் அந்தர்யாமியாக
இருந்து உபதேசம் செய்பவனே. ஞானாதி குணங்களைக் கொண்டவனே ‘வாயுவாஹனனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். நீ ரமாதேவியுடன் இருக்கிறாய். வாயுவில் இருப்பவன் நீயே.
***
No comments:
Post a Comment