Friday, March 3, 2023

#110 - 315-316-317 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 315. ஸ்ரீ விஶிஷ்டாய நம:

ஆனந்த3 3 ஞானாத்3யுத்தம கு3ணவந்தனெந்து3

அனக4வேத3 வாக்யக3ளிந்த3 விஹிதவிஶிஷ்ட

நமோ எம்பெ3னு ப்ரளயத3லி அவஶிஷ்டனு

நீனெ ஸர்வவ உத3ரதொ3ள் இட்டுகொண்டு3 இருவி 

ஆனந்த, பல, ஞானங்களில் சிறந்தவன். அனைத்து வேத வாக்கியங்களால் போற்றப்படுபவன் ‘விஶிஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரளயத்தில் நீ மட்டுமே இருக்கிறாய். அப்போது அனைத்தையும் உன் வயிற்றில் வைத்துக் கொண்டிருக்கிறாய்.  

316. ஸ்ரீ ஶிஷ்டேஷ்டாய நம:

4க்தர அபீ3ஷ்டகள பூர்ணமாடு3விஶிஷ்டேஷ்ட

ஸதா3 நமோ நினகெ3 முக்தாஸ்ரய முக்தர ஸ்வாமி

மோத3மய நீ ஸர்வதா3 4க்தரிந்தா3ராதி3தனு

முத3தி3 ஸ்ரீ லட்சுமியிந்த3 ஸ்துதிஸிகொம்பி3 ப்ரளயதி3 

பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவனே. ஶிஷ்டேஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். முக்தர்களின் கதி நீயே. ஆனந்தமயனே. நீ எப்போதும் பக்தர்களால் வணங்கப்படுபவன். மகிழ்ச்சியுடன், பிரளய காலத்தில், ஸ்ரீலட்சுமிதேவியால் வணங்கப்படுகிறாய். 

317. ஸ்ரீ ஶிக2ண்டி3னே நம:

ஶத்ருக3 அதிஸுக2 2ண்டி3ஸுவவனு நீனு

கரெஸிகொள்ளுவிஶிக2ண்டி3எம்பு3 நாமதி3ந்த3

பரிமிதி இல்லத3 ஶ்சர்யகரவாத3 தேஜஸ்

பரம அத்3பு4 மஹைஶ்வர்ய ரூபனு ஶிக2ண்டி3யு 

எதிரிகளை அதிகமாக எதிர்ப்பவன் நீ. அழைத்துக் கொள்கிறாய் ‘ஶிகண்டி என்று. எல்லைகள் அற்ற ஆச்சரியமான தேஜஸ் கொண்ட, பரம அற்புதமான ஐஶ்வர்ய ரூபன் நீயே.

***


No comments:

Post a Comment