Wednesday, March 8, 2023

#115 - 330-331-332 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

330. ஸ்ரீ அபாம்நித4யே நம:

அபகார்யக3ள் க்ஷீர 3தி4 நவனீத க்4ருத மத்து

கார்யக3ளபி4மானி தே3வதாபாத்ரு ஶ்ரய

நாகி3ருவவஅபாம்நிதி4நமோ பாஹிமாம் பாஹி

நிக3மோக்திஆபோவை ஸர்வதே3வதாஎந்தி3ஹுது3 

பால், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவற்றில் இருந்து, மற்றும் அந்த அபிமானி தேவதைகளில் இருந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பவனான ‘அபாம்நிதியே உனக்கு என் நமஸ்காரங்கள். ‘ஆபோவை ஸர்வ தேவதா என்று ஸ்ருதி உன்னையே புகழ்கிறது. 

331. ஸ்ரீ அதி4ஷ்டானாய நம:

3ர்ப்ப4 தன்னல்லிஹ ஶிஶு ரக்ஷணார்த்த2 ஹிததி3ந்த3

அப்பிகொண்டி3ருவந்தெ ஸர்வ பதா3ர்த்த23 நீனு

அப்பிகொண்டு3 நின்னல்லிட்டிருவிஅதி4ஷ்டானநமோ

அம்பு3ஶாயி ஸ்ரீகூர்ம நீ ஸர்வரக்ஷக ஆதா4 

தாயானவள், கர்ப்பத்தில் இருக்கும் தன் குழந்தையை கவனத்துடன் காப்பது போல, அனைத்து பதார்த்தங்களையும் நீ காத்து, உன்னிலேயே வைத்திருக்கிறாய் ‘அதிஷ்டானனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீகூர்மனே. நீயே அனைவருக்கும் ஆதாரமானவன். 

332. ஸ்ரீ அப்ரமத்தாய நம:

வாயுவத் ப்ரமாத3 ஹீன வேக3வுள்ளஅப்ரமத்த

நமோ நினகெ3அனேஜதே31ம் மனஸோ ஜவீயோ

நைனத்தே3வா ஆப்னுவன் பூர்வமர்ஷத் தத்3தா3வதோயிந்தா

நத்யேதி ஶிஷ்டத் தஸ்மின்னபோ மாதரிஷ்வ 3தா4தி 

வாயுவைவிட அதிகமான வேகம் உள்ள ‘அப்ரமத்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ருதி வேத வாக்கியம் இவ்வாறு உன்னை புகழ்கிறது ‘அனேஜதேகம் மனஸோ ஜவீயோ..’. 

***


No comments:

Post a Comment