Wednesday, March 1, 2023

#108 - 309-310-311 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

309. ஸ்ரீ மஹாஶனாய நம:

மஹாஶத்ரு ஸமுதா3 நாஶமாள்பமஹாஶன

அஹர்நிஶி நமோ நினகெ3 ஆதி3தை3த்யன ஸீள்தி3

மஹி உத்3தா4 ஆதி3வராஹ காஞ்சன ஶிபு

ஸம்ஹாரக ம்ருத்யுமாரக ந்ருஹரே பாஹிமாம் பாஹி 

மிகப்பெரிய எதிரி சமூகங்களை அழிப்பவனே. மஹானே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆதி தைத்யனை நீ கொன்றாய். பூமியை காப்பாற்றினாய். ஆதி வராகனே. ஹிரண்யகசிபுனை கொன்ற நரசிம்மனே, எனக்கு அருள்வாயாக. 

310.ஸ்ரீ அத்3ருஶ்யாய நம:

ப்ராக்ருதேந்த்3ரிய த்3ருஷ்டிகோ3சரனாக3தெ3அத்3ருஷ்ய

பா3கி3 ஶிர நமோ ஸூத்ரவுதத3வ்யக்தமாஹஹி

நீ க்ருபதி3 ஒலிது3 நின்னிச்செயிந்த3லெ தோருவி

நீ காணிஸிகொள்ளலாரி நின்னிச்சாவின: யாரிகு3 

நம்முடைய ப்ராக்ருத இந்திரியங்களுக்கு தென்படாமல், மறைந்து நிற்பவனே. அத்ருஶ்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரிலும் இருந்து, உன் இஷ்டப்படியே நீ காட்டிக் கொள்கிறாய். உன் இஷ்டம் இல்லாமல், நீ யாருக்கும் தென்படுவதில்லை. 

311. ஸ்ரீ வ்யக்த ரூபாய நம:

பத்3மஜாண்ட3 நிர்மாத்ரு தத்க3 பதார்த்த23ளல்லி

நீ 3யதி3 ஹுட்டிஸி நின்னதீ4 ஶ்ரயத3லி

ஹிதவாகி3ருவுவுவ்யக்த ரூபஶ்ச நமோ ஆத்மா

வாரே த்3ருஷ்டவ்யோஸாத4 மெச்சி நின்னிச்செயிம் தோர்வி 

இந்த உலகத்தை படைத்து, அதில் உள்ள ஒவ்வொரு பதார்த்தங்களை படைத்து, அவற்றில் நீ இருந்து, உன் அதீனமாகவே வைத்துக் கொண்டு, அவற்றை காக்கிறாய். வ்யாக்தரூபாயனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களின் ஸாதனைகளை நீ மெச்சி, உன்னுடைய விருப்பப்படி அவர்களுக்கு தரிசனம் அளிக்கிறாய்.

***

No comments:

Post a Comment